புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 20, 2023)

கிறிஸ்துவின் சிந்தை என்னில் உண்டா?

எபிரெயர் 12:3

தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்


உன்னதத்திலே வாசம் செய்யும் ஆண்டவராகிய இயேசு, தேவனு டைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளை யாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடிக்கு ம்படி மரணபரியந்தம் வரை கீழ்ப டிந்தவராகி, தம்மைத் தாமே தாழ் த்தினார். இதுவே கிறிஸ்துவின் சிந்தை. இந்த சிந்தையே நம்மில் காணப்படவே ண்டும். கிறிஸ்தவன் என்று தன்னை கூறுகின்றவன் எவ னிடத்திலும், கீழ்படிவும், தாழ்மை யும் காணப்பட வேண்டும். கீழ்ப டிவும், தாழ்மையும் இல்லாமல் ஒருவனும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க முடியாது. ஆண்டவராகிய இயேசு தாமே, பிதாவின் சித்தத்தை செய்யும் பாதையில், பல அவமானங்கள், நிந்தைகள், பாடுகள், அநியாயங்களை சகிக்க வேண்டியதாயிருந்தது. அவருடைய நோக்கமெல்லாம், பிதாவின் சித்தத்;தை நிறைவேற்ற வேண்டும் என்றிருந்தால், தனக்கு நேரிட்ட அவமானங்கள், நிந்தைகள், பாடுகள், அநியாயங்களை மனத்தாழ்மையோடும், கீழ்படிவோடும் ஏற் றுக் கொண்டார். ஆனால், இன்றைய நாட்களிலே, சிலர் தங்களை ஞான ஸ்நானத்திற்கு ஒப்புக் கொடுத்த பின்பு, தேவ சித்தத்தை நிறைவேற்ற பூமியிலிருந்து உன்னத்திற்கு ஏறிவிட்டவர்களைப் போல மாறிவிடுகி ன்றார்கள். அவமானங்கள், நிந்தைகள், பாடுகள், அநியாயங்களை சகித்துக் கொள்ள மனதில்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். தங்கள் சுயசிந்தையே மேன்மையானது என்று எண்ணி விவாதங்களையும் கல கங்களையும் உண்டு பண்ணிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, ஆண் டவராகிய இயேசுதாமே 'தமக்குமுன் வைத்திருந்த சந்தோ ஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனு டைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ் விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங் கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத் தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.' எனவே, மனத் தாழ்மையை அணிந்து கொள்ளுகள். கீழ்படிவுள்ளவர்ளாக இருங்கள். தேவ சித்தம் நிறைவேற இடங் கொடுங்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் ஆளுகை செய்கின்றீர் என்பதை நான் உணர்ந்தவனாக, உம்முடைய சித்தம் என்னில் நிறைவேற்றி முடிக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28-30