புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 19, 2023)

புதிய வாழ்வை நோக்கி முன்னேறுங்கள்

2 கொரிந்தியர் 4:16

எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவன், அநேக ஆண்டுகளாக மதுபான வெறிகொள்ளுதலுக்கு அடிமையாக இருந்து வந்தான். மிகை யாக மதுபானத்தை அருந்தி வெறிகொண்டு, தெருவருகே விழுந்து கிடப்பது அவனுக்கு வழக்கமாக இருந்தது. அதனால், ஊரார் அவ னுக்கு குடிகாரன் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்கள். அவனுடைய வீடு அந்த ஊரிலே எல்லைக் குறி ப்பாக மாறிவிட்டது. எடுத்துக் காட் டாக, அந்த குடிகாரனின் வீட்டிற்கு அப்பாலே இருக்கும் கடைக்கு போகின்றேன் என்று ஜனங்கள் கூறிக் கொள்வார்கள். ஒரு நாள், அவன் ஆண்டவராகிய இயேசுவை அறி ந்து, தன்னை அவரிடம் முற்று முழு வதுமாய் ஒப்புக் கொடுத்து, அற் புதவிதமாக, மதுபான அடிமைத்தனத்திலிருந்து முற்றாக விடுதலையா க்க ப்பட்டான். அவனுடைய வாழ்வு முற்றாக மாற்றப்பட்டதைக் கண்ட ஊரா ரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும், அவனுக்கு வைத்த பெயரை அவர்கள் மாற்றவில்லை. இந்த குடிகாரனும் கடவுளைப்பற்றி பேசுகின் றானா? என்று கூறிக் கொள்வார்கள். ஆரம்பத்திலே அதை குறித்து வேதனைப்பட்ட அந்த மனிதனானவன், ஆண்டுகள் செல்லச் செல்ல, ஆண்டவர் இயேசுவிற்குள் முதிர்ச்சியடையந்து வந்தான். இப்போது, பத்து ஆண்டுகள் கடந்த பின்னர், ஊரிலுள்ளவர்கள் அவனை குடிகாரன் என்று அழைக்கும் போது, அவன் தன் மனதிலே, தனக்கு வெளிப்பட்ட தேவனுடைய மகா பெரிதான கிருபையை நினைத்து அவருக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தான். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவன் தான் குடிகாரனாக இருந்த நாளைவிட்டு முன்னேறிக் கொண்டே சென்றான். ஆனால், அவனை குடிகாரன் என்று அழைக்கும் மனிதர்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல, அவனுடைய பழைய வாழ்க்கையை தங் கள் மனதிலே வைத்திருந்ததால், அவர்கள் பின்நோக்கி சென்று கொண்டே இருந்தார்கள். பிரியமானவர்களே, சில வேளைகளிலே, உங்களுடைய வாழ்க்கையிலும், அநேக வருடங்களுக்கு முன்னதாக நீங்கள் செய்த குற்றத்தை பற்றிக் கொண்ட சிலர், கடந்த காலத்திலேயே வாழ்ந்து வரலாம். அவர்கள் பின்னானவைகளை பற்றிக் கொண்டு பின்நோக்கி செல்கின்றார்கள். நீங்களோ, பின்னானவைகளை மறந்து, முன்னான வைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருங்கள்.

ஜெபம்:

இந்த உலகத்தின் கேட்டிலிருந்து என்னை விடுதலையாக்கிய தேவனே, மாசத்திற்குரிய காரியங்களை என்னைவிட்டு அகற்றி, நீர் தந்த புதிய வாழ்விலே நான் முன்னேறிச் செல்ல எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:11-14