புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 18, 2023)

உங்கள் பழைய பெயர்கள் என்ன?

1 யோவான் 3:1

நாம் தேவனுடைய பிள்ளை களென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங் கள்;


தன் சகோதரர்களால், புறக்கணிக்கப்பட்ட வாலிபனாகிய யோசேப்பு, அடிமையாக விற்கப்பட்டு, அந்நிய தேசத்திலே போத்திபார் என்னும் எகிப்தின் அதிகாரியின் வீட்டிலே வேலை செய்து வந்தான். போத் திபாரின் மனைவியானவள், தன் கணவன் வீட்டில் இல்லாத சமய த்திலே, தன்னுடைய இச்சசைகளுக்கு யோசேப்பு உடன்படாததை கண் டபோது, அவன் தன்னோடு தகாதவிதமாக நடந்து கொண்டான் என்று பொய் குற்றம் சாட்டினாள், அத னால் அவன் அரச சிறையிலே போடப்பட்டான். அவனுடைய சகோதரர் அவனை 'சொற்பனக்காரன்;' என்றொரு பெயரை வைத்திருந்தார்கள். அவனை விலைகொடுத்து வாங்கிய வியாபாரிகள், அவனை 'அடிமை' என்று அழைத்தார்கள். போத்திபாரின் வீட்டார், அவனை 'துரோகி' என்று அழைத்திருப்பார்கள். எகிப்தின் சட்டப்படி அவன் 'சிறைக்கைதி' என்று அழைக்கப்பட்டான். ஆனாலும், அவனோ, கர்த்தருடைய நேரத்திற்காக காத்திருந்தான். கர்த்தருடைய முன்குறித்த நேர த்திலே, அவர் அவனை சிறையிலிருந்து எடுத்து, எகிப்தின் அதிகாரி என்று பெயரை கொடுத்து, அவனை குற்றப்படுத்தின யாவருக்கும் மேலாக அவனை உயர்த்தி, அவர்கள் யாவரும் அவனை பணிந்து கொள் ளும்படியான பெயரை அவனுக்குக் கொடுத்தார். ஆண்டவர் இயேசு வின் விலை மதிக்க முடியாத இரத்தத்தினாலே மீட்கப்பட்ட சகோதர சகோரிகளே, ஒருவேளை நீங்கள் செய்த குற்றத்திற்காகவோ, செய்யாத குற்றத்திற் காகவோ, அல்லது எக்காரணங்கலுமின்றியோ, உங்களு க்கும் பலர் பற்பல பெயர்கள் சூடி அழைத்திருக்கலாம். அவை நற்பெய ராகவோ, அவப்பெயராகவோ, நகைப்புக் குரியதாகவோ இருந்திக்க லாம். நம்முடைய பிதாவாகிய தேவனோ, உங்களுக்கிருந்த பழைய பெயர்கள் யாவையும் குலைத்துப் போட்டு, தம்முடைய குமாரன் வழி யாக, தம்முடைய பிள்ளை என்கின்ற அதிஉயர்ந்த பெயரை உங்க ளுக்கு சூட்டியிருக்கின்றார். இந்த உலகம் ஒருவேளை, உங்களது பழைக காரியங்களை குறித்து பேசிக் கொண்டிருக்கலாம். குப்பைகளை எடுத்து, அவைகளை தங்கள் மனதிலே வைத்து, வாயினாலே அறிக்கை யிடுகின்றவர்கள் அவைகளை சேர்த்து வைக்கட்டும். நீங்களோ, தேவ னுடைய பரிசுத்த பிள்ளைகளாக நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, தாயின் கர்ப்பத்திலே என்னை முன்குறித்து, தகுதியில்லாத என்னை உம்முடைய பிள்ளையாக்கினீர். நான் உம்முடைய பிள்ளையாக வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:10