புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 17, 2023)

துயரத்திலே சோர்ந்து போகாதிருங்கள்

1 பேதுரு 5:10

கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;


வாழ்க்கையிலே உண்டாயிருக்கும் தீராத தொல்லைகளினால், மனம் நொந்து ஒடுங்கிப் போயிருக்கும் சகோதரனே, சகோதரியே, உங்கள் கண்ணீரை அவர் தம்முடைய துருத்தியில் வைத்து, அவைகளை தம் கணக்கில் வைத்திருக்கின்றார். 'நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உம க்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் உள்ளம் குழம்பி அலைகிறது. என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற் போயிற்று. என் சிநேகிதரும் என் தோழ ரும் என் வாதையைக் கண்டு விலகு கிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.' 'கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடு ப்பீர்.' (சங்கீதம் 38:8-11, 15) என்று ஒரு தேவபக்தன் தன் துன்பத்தின் நாட்களிலே பாடியிருக்கின்றார். நித்திய கன மகிமைக்கென்று அழை ப்பை பெற்றவர்களே, சோர்ந்து போகாதிருங்கள். இரவுக்கு எல்லை விடியலாயிருப்பது போல, உங்கள் துக்கங்களுக்கும் எல்லையை வைக் கின்றார். முடிவிலே எல்லையில்லாத நித்திய சமாதானமாக வாழ்க்கை கட்டளையிடுவார். உங்கள் விசுவாச அறிக்கையிலிருந்து தளர்ந்து போகா திருங்கள். உங்கள் மனவேதனையிலே நீங்கள் தேவனை தூஷpத்து, முற்றாக அழிந்து போக வேண்டும் என்பதையே உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் விரும்புகின்றான். அவனுடைய தந்திரங்கள் உங்களில் நிறைவேற இடங் கொடுக்காதிருங்கள். 'தெளிந்த புத்தியுள்ளவர்களா யிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசா னவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனு க்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்த வராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக் காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பல ப்படுத்தி, நிலைநிறுத்துவாராக. அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (1 பேதுரு 5:8-11)

ஜெபம்:

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கும் தேவனே, என் துக்கத் திலே நான் மடிந்து போகாதபடிக்கு என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:12