புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 14, 2023)

இன்றைய நாளை எப்படி சமாளிப்பது?

சங்கீதம் 48:14

இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.


நீ துன்பத்தின் மத்தியிலே இருக்கின்றபடியால், உன் பெலவீனத்திலே நீ நினைத்தவைகளையே பேசுகின்றயாய். நேற்றய நாளை நீ கடந்து வரவில்லையா? உன்னை உருவாக்கி தேவன் உன்னோடிருந்து உன்னை நடத்தி வந்தாரே.இன்றை நாளை நீ சமாளிக்கவில்லை, உன்னை அழை த்த தேவன் உன்னோடு கூட இருக்கின்றார். நாளைய நாளைக் குறித்து கவலையடையாதே, வாக்குமாறாத தேவன் உன்னோடிருந்து உன்னை வழிநடத்துவார் என்று மனமடிவடை ந்திருக்கும், ஒரு மனிதனானவனை அவனுடைய மேய்ப்பரானவர் ஆறு தல் படுத்தினார். நெருக்கத்தின் நாட் களிலே எலியாவின் தேவன் எங்கே என்று மனிதர்கள் சிலவேளைகளிலே கேட்;டு கொள்கின்றார்கள். எலியா தன் நெருக்கத்தின் நாளிலே உண் டான மரண பயத்தினால் ஓடி ஒளி ந்து கொண்டான். அப்பொழுது கர்த்தர், எலியாவே நீ எங்கே இருக் கின்றாய் என்று கேட்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, 'இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். உங்களை திக்கற்றவராக விடேன்' என்று கூறிய கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களை கைவிடமாட்டார். அவர் உங்களை மறந்து போகவுமாட்டார். அவர் உங்களை விட்டு விலக மாட்டார். ஆனால், நீங்கள் கர்த்தரைவிட்டு ஓடி ஒளிந்து கொள்ளாதிருங்கள். தேவனிடத் தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். ஒரு வேளை, தகப்பனும் தாயும் தங்கள் பிள்ளைகளை மறந்து போனா லும் கர்த்தர் தம்முடையவர்களை தம்மோடு சேர்த்துக்கொள்ளுவார். தீங்கு நாளில் அவர் அவர்களை தம்முடைய கூடாரத்தில் மறைத்து, அவர் களை தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, அவர்களைக் கன்ம லையின்மேல் உயர்த்துவார். எனவே, ஆத்துமா சோர்ந்து போகும் போது, விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் அவருடைய செட்டைகளின் நிழலிலே சேருங்கள். எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் என்று தேவ பக்தன் தன் துன்பத்திலே அறிக்கை செய்தது போல, நீங்களும் அறிக்கை செய்யுங்கள். அப்பொழுது, தேவனானவர், பரலோகத்தி லிருந்து ஒத்தாசை அனுப்பி, உங்களை இரட்சிப்பார். தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். நாம் சேவிக்கின்ற தேவன் சதா காலமும் நமது தேவனாக இருந்து நம்முடைய மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

ஜெபம்:

வாக்கு மாறாத தேவனே, என் கைகளைச் சுத்திகரித்துக் கொண்டு, இருமனமுள்ளவனாக வாழாமல், என் இருதயத்தை பரிசுத்தமாக்கும்படி க்கு உம்மண்டையிலே தாழ்மையோடு சேர கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:8