தியானம் (கார்த்திகை 13, 2023)
பயம் சூழ்ந்து கொள்ளும் போது...
சங்கீதம் 118:4
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகி றவர்கள் சொல்வார்களாக.
இன்றைய நாளை நான் எப்படியோ கடந்து விட்டேன். நாளை நாளைக்கு எப்படி முகங் கொடுப்பேன்? என்று ஒரு விசுவாசியானவன், தன் படுக்கையிலிருந்து சிந்தித்துக் கொண்டிருந்தான். காலையிலே வழித்தெழும் போது, அவன் தேவனுடைய புதுக் கிருபையை தன் இருதயத்திலே உணர்ந்து கொண்டான். சூழ்நிலைகள் இன்னும் மாறிப் போகவில்லை, ஆனால், மனதிலே அவனை அறியாத ஒரு நம்பிக்கை உண்டாகியிருப்பதை உணர்ந்து கொண்டான். அந்த நம்பி க்கை புதிதாக தோன்றிய நம்பி க்கை அல்ல. அது அவன் உள் ளத்தில் எப்போதும் இருந்தது. ஆனால், அதை உணரமுடியாதபடிக்கு அவன் தன் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நோக்கிப் பார்த்திருந்தான். அதனால், அவன் மனக் கண்கள் மங்கலாக இருந்தது. ஆனால், கர்த்தரோ, அவன் மனக் கண்களை மறுபடியும் பிரகாசிப்பித்தார். ஆம், தேவ பிள்ளைகளுடைய வாழ்விலே துன்பங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, சில வேளைகளிலே, வேதனை, வெட்கம், அவமானம், பயம் அவர்கள் மனதில் குடி கொண்டு விடுகின்றது. அந்த வேளையிலே அவர்கள் தாங்கள் யார் என்பதை யும், தங்களை அழைத்த தேவன் இன்னார் என்பதையும் சொற்ப காலம் மறந்து போய்விடுகின்றார்கள். அவர்கள் மனதில் தோன்றிய உலக கவலையும், மனிதர்களைக்; குறித்த பயமும், கர்த்தர் தங்கள் வாழ்விலே அணையாத தீபமாக இருப்பதை அவர்கள் உணரமுடியாமல் தடுத்து விடுகின்றது. தம்முடைய பிள்ளை களின் நிலைமையை நன்றாக அறிந்த பரம பிதா, அவர்களை பாதி வழியிலே விட்டுவிடமாட்டார். தம் பிள்ளைகளின் மனதிலே உண்டான பயத்தை புறம்பே தள்ளி, அவர் களை பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து தூக்கி யெடுத்து, அவர்கள் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, அவர்கள்; அடிகளை உறுதிப்படுத்தி, தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர்கள் வாயிலே கொடுக்கின்றார். அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். பிரியமானவர்களே, உங்களை எதிர்க்கின்ற மனிதர்க ளையும், சூழ்நிலைகளையும் குறித்த பயம் உங்களது மனதை ஆட்கொ ள்ளும் போது, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளதென்று அறிக்கை யிடுங்கள். நெருக்கத்தில் நாளிலே நீங்கள் கர்த்தரை நோக்கி அப்ப டியாக அறிக்கை செய்யும் போது, கர்த்தர் அதைக் கேட்டு, உங்கள் சூழ்நிலைகளை மாற்றி உங்களை விசாலத்திலே வைப்பார்.
ஜெபம்:
என் பெலனும்இ என் கீதமும், எனக்கு இரட்சிப்புமான தேவனே, என் நெருக்கடி வேளையிலே என் சத்தத்தை கேட்டு, என் பயத்தை நீக்கி, என் வீட்டிலே இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தை தொனிக்கச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 37:3-4