புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 12, 2023)

நெருக்கங்கள் சூழந்து கொள்ளும் போது...

சங்கீதம் 138:8

கர்த்தர் எனக்காக யாவை யும் செய்து முடிப்பார்;


ஒரு தகப்பனானவன், அவன் வசிக்கும் தேசத்திலே நிலவும் பொருளாதார நெருக்கடியினால், தன் வேலையை இழந்து போனான். அத னால் வந்த சில கஷ;டங்களை, அவனும் அவனுடைய குடும்பத்தாரும் உணர ஆரம்பித்தார்கள். அவனுடைய பிள்ளைகள் அவனை நோக்கி: அப்பா, ஏன் இப்படியான கஷ;டமான நாட்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார்கள். அப்பொழுது அவன் தன் பூர்வ நாட்களைக் குறித்தும், தேவன் தன் வாழ்வில் செய்த அதிசயமான செயல்களை குறித்து விபரித்து கூறி னான். நான் கூப்பிட்ட நாளிலே என க்கு மறுஉத்தரவு அருளி, என் ஆத் துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தின தேவன் இன்றும் ஜீவிக்கின்றார். நாம் அவரோடு அவரிலே தங்கி வாழும்படி அவர் நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். பஞ்ச நாட்களிலும் அவர் தம்முடையவர்களை போஷpக்க அறிந்திருக்கி ன்றார் என்று தன்னுடைய வாழ்விலே தேவன் தந்த வெற்றிகளை குறித்து தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தான். பிரியமானவ ர்களே, நாமும் நம்முடைய வாழ்வில் உண்டான வெற்றிகளை குறித்து குடும்ப்த்திலும், சபையிலும் சாட்சி பகர்கின்றவர்களாக இருக்க வேண் டும். அதனால், நம்முடைய வாழ்விலே நன்றி பெருக வேண்டும். அன்று என் வாழ்வில் அற்புத செயல்களை செய்த தேவன், என் முதிர்வ யதி லும், என் பெலன் ஒடுங்கிப் போகும் நேரத்திலும் என்னை கைவிட மாட்டார் என்ற விசுவாச அறிக்கை உறுதியாக இருக்க வேண்டும். 'கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க் கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். நான் துன் பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்து ருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது. உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக' என்று ஒரு தேவபக்தன் பாடி னான். அந்த பாடல் நம்முடைய நாவிலும் தொனிக்க வேண்டும். எனவே, சூழ்நிலைகளை கண்டு மனம் சோர்ந்து போகாம லும், இன்னுமொரு பெரிதான அற்புத செயலை உங்கள் வாழ்வில் நடத்தி முடிக்க இருக்கும் கைவிடாத கன்மலையாகிய கர்த்தருடைய நேரத்திற்காக பொறுமையோடு காத்திருங்கள். நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார் என்று மறுபடியும் சொல்லும் நாள் சமீபமாயிக்கின்றது.

ஜெபம்:

உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாத தேவனே, நெருக்கடியான நாட்களிலே நான் சோர்ந்து போகாதபடிக்கு, நீர் தந்த வெற்றிகளை அறிக்கை செய்து உமக்காக காத்திருக்க பொறுமையைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 9:1