புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 11, 2023)

முன்னைய சந்ததியின் மேன்மைகள்

எபேசியர் 2:7

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.


நீங்கள் உங்கள் பூர்வீகங்களையும், பூர்வ நாட்களையும் குறித்த மேன்மைகளை பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு பெருமை பாராட்டி கூறியதுண்டோ? சில மனிதர்கள் தங்கள் முன்னைய சந்ததிகளின் உலக மேன்மைகளை பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு, அவர்களுடைய சிறு பிராயத்திலேயே விபரித்து கூறுவதுண்டு. அதை கேட்கும் பிள் ளைகளும், தங்கள் அறியாமையின் வயதிலும், தங்கள் சந்ததியைக் குறித்து பெருமையாக தங்கள் நண் பர்களோடு பேசிக் கொள்வார்கள். சில சமயங்களிலே, இப்படிப்பட்ட தான, செயல்களை தேவபிள்ளைகள் மத்தியிலும் நீங்கள் பேசக் கேட்க லாம். இவைகளினாலே, பிள்ளைகள் மத்தியிலே பெருமையையும், சில வேளைகளிலே அகங்காரமும் வளர பெரியவர்களே காரணராகி விடுகின் றார்கள். நாம் அப்படி இருக்கலாகாது. ஆனால், எங்கள் பிதாக்களு டைய நாட்களாகிய பூர்வநாட்களில் தேவன் நடப்பித்த கிரியைகளை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு விபரித்துக் கூற வேண்டும். முற்காலத் திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்ட மதியீனமான நாட் கள் உண்டு. அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பின வைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபா க்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரிய முள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டோம். முதலாவ தாக, அந்த இரட்சிப்பின் மேன்மையை உணர்ந்து, அதிலே நாம் மகி ழ்ந்து களிகூர வேண்டும். அந்த மேன்மையை உணராவிடில், எப்படி நாம் அவைகளை நம்முடைய பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் விபரித்து கூற முடியும்? இத்தகைய மகத்துவமுள்ள பதவியை தந்த தேவனுடைய மகத்தான செயல்களை, பிள்ளைகள் நம்மை நோக்கி பார்க்கும் வய திலே, அவர்களோடு அனுதினமும் பேச வேண்டும். நண்பர்களோடு நாம் உட்கார்ந்திக்கும் போது தேவனுடைய செயல்களை அறிவிக்க வேண் டும். நம்முடைய உறவினருக்கு நாம் பரலோக மேன்மைகளை எடுத்துக் கூற வேண்டும்.

ஜெபம்:

என் புகலிடமான தேவனே, உம்முடைய மகத்துமுள்ள செயல் களை தியானித்து, உணர்வடைந்து, அவைகளை அடுத்த சந்ததிக்கும் அறிவிக்கும்படிக்கு நீர் உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல் வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 118:15