தியானம் (கார்த்திகை 09, 2023)
      உங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளுங்கள்
              
      
      
        சங்கீதம் 37:5
        உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
       
      
      
        தம்பி, நாட்டின் பொருளாதார நிலைமைகள் நன்றாக இல்லை. இனி நிலைமைகள் எப்படியாக இருக்குமோ தெரியாது, எனவே, நீ வெளியூ ருக்கு சென்று, அங்கே உனக்கு ஏற்ற வேலையொன்றை தேடிக் கொள். இங்கே வேலை எடுப்பதும் மிகவும் சிரமமாயிருக்கின்தே என்று ஒரு தகப்பனானவர், தன்னுடைய மூத்த மகனானவரிடம் கூறினார். அதன்படி, அந்த மகனானவனும், வெளியூருக்குச் சென்று, பல கஷ;டங்கள் மத்தியிலும், பிரயாசப்பட்டான். சில ஆண்டுகள் கடந்து சென்ற பின் அவன் தன் பிரயாசத்தின் பல னோடு ஊருக்கு திரும்பினான். அவ னுடைய நிலைமை நன்றாக உயர்ந்திருக்கின்றது என்று கண்டு கொண்ட அயலவனொருவன், தன் னுடைய மகனானவனை நோக்கி: நண்பர்களோடு சேர்ந்து உன் கால த்தை வீணடித்துத் திரிந்தது போதும், வெளியூருக்கு சென்று உழைத்து கொள் என்று அவனை அனுப்பி வைத்தான். ஆனால், அவன் தன் ஊரிலே எப்படி அடங்காதவனாக, காலத்தை விரயப்படுத்தி, தன் சோம் பேறித்தனத்தை மாற்றிக் கொள்ள மனதில்லாமல், அதிகாரங்களையும், அரசாங்கத்தையும் குறை கூறி, ஊதாரித்தனமாக வாழ்க்கை நடாத்துகி ன்றவனாக இருந்தானோ, அப்படியே வெளியூரிலும் வாழ்ந்து வந்தான். அந்த அயலவனின் மகனானவன், வெளியூருக்கு சென்றதால் அவனுக்கு வந்த நன்மை என்ன? அவன் வெளியூரிலே இருக்கின்றான் என்று பெயர் மாத்திரம் இருந்தது ஆனால், அவன் தன் சுபாவத்தை மாற்றிக் கொள்ள மனதற்றவனாகவே இருந்து வந்தான். முன்னர் வறுமையான நாட்டிலே வாழும் கீழ்படியாமையின் மகனாக இருந்த வன், இப்போது செல்வந்த நாட்டிலே வாழ்கின்ற கீழ்ப்படியாமையின் மகனாக காணப்பட்டான். மனிதர்கள் அவனை என்ன செய்கின்றாய் என்று கேட்கும் போது, பெரிதான செழிப்பான நாட்டிலே வாழ்கின்றேன் என்று கூறிக் கொள்வான். இதுபோலவே, தன்னை மாற்றிக் கொள்ள மனதில்லாமல், இடங்களை மாற்றிக் கொள்கின்றவனுடைய நிலை மையும் இருக்கின்றது. பிரியமானவர்களே, ஒருவன் வானத்திற்கு ஏறினாலும், தேவன் அங்கே இருக்கின்றார். அவருடைய வழி மாறிப் போவதில்லை. ஒருவன் பாதாளத்தில் தன் படுக்கை போட்டாலும், தேவன் அங்கேயும் அவனை காண்கின்றார். அவருடைய நியமங்கள் மாறாதவைகள். எனவே, முதலாவதாக நாம் நம்முடைய மனதை கர்த்தருடைய வழிக்கு திருப்பிக் கொள்வோமாக.
      
      
      
            ஜெபம்: 
            என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் அறிந்த தேவனே, வேதனை உண்டாக்கும் வழியை நான் தெரிந்து கொள்ளாதபடிக்கு, எனக்கு நீர் உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
      
 
      
              மாலைத் தியானம் - 2 கொரி 5:17