புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 08, 2023)

நிறைவான இடத்திற்கு போக வேண்டும்

1 சாமுவேல் 2:26

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.


இன்றைய நாட்களிலே, தாங்கள் வளர்ந்து நிறைவடைவதைப் பற்றி எண்ணமற்றவர்களாக, நிறைவான இடங்களை தேடி ஓடுகின்றார்கள். ஒருவன் தான் செல்லுமிடத்திலே, தன் குறைவை உணர்ந்து, தான் வளர வேண்டும் என்று தன்னை கர்த்தரின் வழிக்கு ஒப்புக் கொடுப்பானானால், அதனால் அவனுக்கு பிரயோஜனம் உண்டாகும். ஏலி என்னும் ஆசாரிய னுடைய நாட்களிலே, கர்த்தருடைய வார்த்தையானது அபூர்வமாயிருந் தது. ஏலியின் குமாரர்கள் கர்த்தரு டைய ஆலயத்திலே இருந்தபோதும், அவர்கள் பேலியாளின் குமாரர்களா யிருந்து, மனுஷருக்கும், கர்த்தரு க்கும் முன்பாக பொல்லாத காரியங் களை துணிகரமாக நடப்பித்து வந்தார்கள். அவர்கள் எப்படி துன்மார் க்கரானார்கள்? அவர்கள் கர்த்தருடய வார்த்தைக்கு கீழ்படிந்து, அவர் போட்ட எல்லைக்குள் வாழாமல், எல்லையை மீறியதால் துன்மார்க்க ரானார்கள். அதனால், தேவன் தாமே சீலோவிலே இருந்த தன் ஆலய த்தின் ஸ்தானத்தை மாற்றவில்லை. மாறாக, அவர்கள் மத்தியிலே, பிள்ளையாண்டானாகிய சாமுவேலை வளர்த்து வந்தார். சாமுவேல், கீழ்ப்படிவுள்ளவனாக இருந்ததால், கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த் தர் அவனோடு இருந்ததால், அவன் தன்னை சூழ நடக்கும் துன்மார்க்க மான செயல்களை நோக்காமல், கர்த்தருக்கு பிரியமாய் இருப்பதிலே நோக் கமாயிருந்தான். இன்று சில தேவபிள்ளைகளும் கூட, கர்த்தரு டைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, கர்த்தர் குறித்த காலம் நிறைவேறு ம்வரை பொறுமையாய் இருக்க மனதில்லாமல், கர்த்தர் தங்களுக்கு போட்ட எல்லைகளை உடைத்துக் கொண்டு, கீழ்படியாமையின் பிள் ளைகளாக மாறிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, அலைகள் மோதி யடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவா தபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மண லை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்கு முன்பாக அதிரா திருப்பீர்களோ என்று கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட ஜனங்களுக்கு எச்சரிப்பின் வார்த்தையை அனுப்பினார். தேவ ஜனங்கள் என்று அழை க்கப்பட்ட அவர்கள், இப்போது, முரட்டாட்டமும் கலகமுமான ஜனங்கள் என்று கர்த்தரால் அழைக்கப்பட்டார்கள். நீங்களோ, அப்படியான நிலை க்கு தள்ளப்படாதபடிக்கு, கர்த்தருடைய பலத்த கைக்குள் அடங்கியிரு ங்கள். நீங்கள் கர்த்தரோடு இருந்தால், யார் உங்களை எதிர்த்து நிற்க முடியயும்?

ஜெபம்:

அதினதின் காலத்தில் நேர்த்தியாகவும் செம்மையாகவும் காரிய ங்களை நடப்பிக்கின்ற தேவனே, நீர் முன்குறித்த நாள் வரைக்கும் நான் உமது பலத்த கைக்குள் அடங்கியிரு எனக்கு பொறுமை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:6-7