புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 06, 2023)

தேவன் போட்ட எல்லைகள்

1 தெசலோனிக்கேயர் 4:7

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.


உன்னதமான தேவன், காலத்திற்கும், இயற்கைக்கும் மட்டுமோ எல்லை வகுத்தார்? நீதிக்குத் அநீதிக்கும் எல்லைகள் இல்லையோ! பரிசுத் தத்திற்கும் அசுத்தத்திற்கும் எல்லைகள் இருக்கின்றதல்லவோ! ஆசீர் வாதத்திற்கும் சாபத்திற்கும் வரையறை உண்டல்லவோ! கடலுக்கு கட வாத எல்லையை வரைந்தவர், எல்லாவற்றையும் பூரணமாக சிருஷ; டித்து, அவை யாவற்றிற்கும் எல் லையை வைத்தார். அந்த எல்லை க்குள்ளே யாவும் நேர்த்தியாகவும் அழகாகவும் காணப்படுகின்றது. படைப்புக்கள் அதன் எல்லையை மீறும் போது அங்கே அலங்கோ லங்களும், பேரழிவுகளும் உண்டா கின்றது. ஆதியிலே தேவன், மனிதனை சிருஷ;டித்த போது, தம்முடைய சாயலாக அவனைச் சிருஷ;டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிரு ஷ;டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ;டித்தார். கணவன் மனைவியாக அவர்களை இணைத்து, பரிசுத்த மெய்விவாகத்தை ஏற் படுத்தினார். புருஷனாகிய ஆதாம், தன் மனைவியாகிய ஏவாளோடு இசைந்திருந்தான். லோத்தின் நாட்களிலே, சோதோம் கொமோரா என் னும் பட்டணத்தார், விபசாரம்பண்ணி, காமவிகார நடக்கையால், அந்நிய மாம் சத்தைத் தொடர்ந்து, தேவன் ஆதியிலே போட்ட எல்லையை மீறியதால் நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்தார்கள் (யூதா 1:7, 2 பேதுரு 2:6-7). மேலும் உலக மனிதரிகளில் சிலர், திருமணத்திற்கு பல விதமான வரைவிலக்கணங்களை கொடுத்து, தேவன் ஆதியிலே போட்ட எல்லையை மீறி, தங்கள் சரீரங்களை அவமானத்திற்கும், அவலட் சணமாதை நடப்பிப்பதற்கும் ஒப்புக் கொடுத்திருக்கின்றார்கள் என்று பரிசுத்த வேதாகமகம் கூறுகின்றது. உலகம் தன் போக்கிற்கு போகலாம், உலக சட்டதிட்டங்களை மாற்றி, அவற்றில் கொஞ்சக் காலம் களிகூ றலாம் ஆனால் தேவனுடைய எல்லைகள் காலத்தோடு மாறிப் போவதில்லை. தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல, பரிசுத்தத்திற்கென்றே அழைத்தார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டை பண்ணுகிறான். பிரியமானவர்களே, தேவன் போட்ட எல்லைக்குள்ளே சமாதானமும், மாறாத சந்தோஷமும் உண்டு. அந்த எல்லைகளை உடை த்துப் போடுகின்றவன் அதனால் வரும் பின்விளைவுகளை சந்திப்பான். நீங்களோ, தேவனுடைய எல்லைக்குள்ளே உங்கள் ஆத்துமாவை காத் துக் கொள்ளுங்கள். அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் கருத்தோடு கற்றுக் கொடுங்கள்.

ஜெபம்:

நன்மைகளை அருளும் அன்பின் பரம பிதாவே, இந்த உலகம் தரும் சுதந்திரத்திற்கு இடங் கொடாமல், எல்லாக் காவலோடும் என் இரு தயத்தைக் உம் வார்த்தையின்படி காத்துக்கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 10:8