புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 05, 2023)

அவர் கோபிப்பதற்கு தாமதிக்கின்றார்

அப்போஸ்தலர் 17:30

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந் தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த குடியானவனொருவன், செய்த குற்றத்தை அந்த கிராமத்தின் அதிகாரிகளும், மூப்பர்களும் அடங்கிய குழுவினர் விசாரணை செய்தார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, அந்த குற்றம் செய்த குடியானவனின், குரலின் தொனி ஏற்புடை யதாக இருக்காததால், அந்த கிராமத்தின் அதிகாரிகள் மிகவும் கோப துடன் அந்த குடியானவனை நோக்கி: நீ, செய்த குற்றத்தோடு இன்னும் நீ ஏன் உன்மேல் அதிக பாரத்தை ஏற்றிக் கொள்ள வேண் டும்? உன் தொனியை அடக்கிக் கொள், அல்லது அதற்குரிய தண் டனையை நீ இன்றே, மக்கள் முன்னிலையில் அடைந்;து கொள் வாய் என்று எச்சரிகை விடுத்தார் கள். இவ்வண்ணமாக, மனிதர் கள் எஜமானனானவர்களுக்கு கொடுக்க வேண்டிய கனத்தில், சற்று குறைந்து போனாலும், சீக்கிரமாய் அவர்கள் கோபம் கொள்கின்றார்கள். ஏனெனில் மனிதர்களுடைய கோப னத்தின் எல்லை அவர்கள் வாழ்நாட்களைப் போல மிகவும் குறுகியதாக இருக்கின்றது. ஆனால், நம்முடைய கர்த்தரோ உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவருமாயிருக்கின்றார். நீங்கள்; எத்தனை தடவைகள் அவருக்கு கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக் காமல், அவரசரவசரமாக கிரியைகளை நடப்பித்திருக்கின்றீர்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். அந்நாட்களிலே, தேவ ஜனங்கள், கண் ஊனமா னதையும், நசல் பிடித்ததையும் மகத்துவமுள்ள தேவனுக்கு பலியிட் டார்கள். அப்படி செய்தாலும் பொல்லாப்பல்ல என்றார்கள். அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். அது போல, இன்றைய நாட்களிலும், பரிசுத்த அலங்காரம் இல்லாமல், தேவாவதி தேவனுடைய சமுகத்திலே கனவீமானவைகளை நடப்பித்து, முகஸ்துதி செய்கின்றார்கள். ஆனாலும், தேவனோ, ஒருவரும் கெட்டு ப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். எனவே, எல்லையில்லாத இந்த கிருபையின் நாட்களை விருதாவாக்காமல், பரிசுத்த அலங்காரத்தோடு அவருக்கு நாம் ஆராதனை செலுத்தக்கடவோம். நாட்கள் சீக்கிரமாய் கடந்து போவதால், உணர்வுள்ள வாழ்க்கை வாழ்ந்து மகாகிருபையின் நாட்களை பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள்.

ஜெபம்:

என் அறியாமையின் நாட்களை காணாதவர்போல இருந்த தேவனே, நான் நிர்மூலமாகாதிருப்பது உம்முடைய கிருபை என்று அறிந்து, உணர்வுள்ள வாழ்க்கை வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 29:2