புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 02, 2023)

திருக்கரத்தால் தாங்கும் தேவன்

யோவான் 10:28

அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.


என்னை எதிர்க்கின்றவர்கள் வெகுவாய் பலத்திருக்கின்றார்கள். அவர் கள் கெடிதும் பயங்கரமுமானவர்கள். ஆனால், நானோ பெலனற்றவன் என்று மனமுடைந்து ஒடுங்கிப் போயிருக்கின்றவர்கள் தங்கள் பெல வீனத்திலே அறிக்கையிடுகின்றார்கள். பூமியிலே பலத்திருக்கின்ற பராக்கி ரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளை பறிக்க யாரால் கூடும்? அல்லது தங்கள் குற்றங்களினாலே நீதியாய் சிறைப்பட்டுப் போனவர் களை யாரால் விடுவிக்ககூடும்? இப்ப டியாக இந்த உலகத்திலே பலத்திரு க்கின்ற சத்துருக்களின் செய்கைகளை கண்டு, மனிதர்கள் திகிலடை கின்றார்கள். உலக மனிதர்கள் மட்டுமல்ல, சில வேளைகளிலே தேவ பிள்ளைகளும் மனமடிவடைந்து போய்விடுகின்றார்கள். பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளை பறிக்க மனிதர்களால் கூடாது. அல்லது தங்கள் குற்றங்களினாலே நீதியாய் சிறைப்பட்டுப் போனவர் களை விடுவிக்க மனிதனால் முடியாது. என்றாலும், இதோ, பராக்கிரம னால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பலவந்த னால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழ க்காடு கிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித் துக் கொள்ளுவேன் என்று சேனைகளின் கர்த்தர் கூறியிருக்கின்றார். சர்வ வல்லமையுள்ள தேவன் முன்னிலையிலே, பார்வோன் என்னும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா, தன் இருதயத்தை கடினப்படுத்தினான். பெலனற்றுப் போயிருந்த தேவனுடைய ஜனங்களை வெகுவாய் ஒடு க்கி, அவர்கள் சுமக்க கூடாத சுமையை அவர்கள்மேல் ஏற்றினான். ஆனால், இந்த உலகத்திலே பராக்கிரமமாயிருந்த அவன், தன்; எல்லை களை வரையறுப்பவர் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதையும், உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிற வனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதையும் அறி யாத மதியீனமாகவே இருந்தான். கர்த்தர் அவன் பெருமையை குலை த்து, அகந்தையை அடக்கினார். பார்வோன் மாத்திரமல்ல, இன்று தேவ பிள்ளைகள்கூட தங்கள் உபத்திரவத்தினாலே, உன்னதமானவர் ஆளுகை செய்கின்றார் என்பதையும், நாம் அவர் திருக்கரத்திலே இரு க்கின்றோம் என்பதையும் மறந்து போய்விடுகின்றார்கள். பிரியமானவ ர்களே, இந்த உலகத் திலுள்ள பராக்கிரமனின் பெலன் ஒடுங்கிப் போகும் ஆனால், ஒருவனும் நம்மை நம்முடைய பிதாவாகிய தேவனின் திருக்கரத்திலிருத்து பறித்துக் கொள்ள முடியாது.

ஜெபம்:

உம்முடைய உள்ளங்கைகளில் என்னை வரைந்திருக்கின்ற தேவனே, சத்துரு வெள்ளம்போல புரண்டு வந்தாலும், நான் உம்முடைய பாதுகாப்பில் இருக்கின்றேன் என்பதை மறந்து போகதிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 49:12-17