தியானம் (கார்த்திகை 01, 2023)
நீங்கள் கர்த்தருடையவர்கள்
ரோமர் 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; அவர் செய்ய நினைத்தது ஒரு போதும் தடைபடாது. அவர் முன்குறித்த காரியம் நிறைவேறும். தேவன் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு காரியத்தை நிர்ணெயித்திருக்க, உலக மனிதர்களோ அறிவில்லாமல் நல் ஆலோசனையை மறைத்து தங்களுக்கு தெரியாததையும், தங்கள் புத்திக்கு எட்டாததையும், தாங்கள் அறியாததையும் அலப்பு கின்றார்கள். அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்து கொள் ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூரு கிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த் துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிரு க்கிற புத்திமதியை மறந்து போய்விடாதிருங்கள். அவர் தம்முடையவர் களை தமது ஆலோசனையின்படி நடத்தி, முடிவிலே அவர்களை மகி மையில் ஏற்றுக் கொள்வார். துன்மார்க்கரின் வாழ்வை காண்கையில், மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை. அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்;. மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள் போல செழித்து வளர்ந் திருக்கின்றார்கள். சன்மார்க்கர் தாங்கள் போட்டுக் கொண்ட நல்வ ழியிலே நடந்து, தங்கள் உத்தமத்திலே பெருமைபாராட்டுகின்றார்கள். ஆனால், கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்றவர்கள் உபத்திரவங்களையும், பாடுகளையும் அனுபவிக்கின்றார்கள் என்று தேவ பிள்ளைகள் பேசிக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, களைகள் வளர்வதற்கு மனிதர்கள் நிலங்களை பண்படுத்த வேண்டி யதில்லை. களைகளானது எவ்விடத்திலும் செழித்து வளருவது போல, கோணலும் மாறுபாடான உலகத்திலே துன்மார்க்கர் களைகளை போல செழிக்கின்றார்கள். தங்களுக்கு நன்மையாக தோன்றும் வழியிலே நடக்கும் சன்மார்க்கரும், பெரும் விருட்சத்தைப்போல வளர்கின்றார்கள். ஆனால், அந்த விருட்சம் தானாய் நற்கனிகளை கொடுப்பதில்லை. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். அவர்கள் பண்படுத்தப்பட்ட நிலங்களிலே வளர்ந்து, தன் காலத்திலே தாராளமாய் நற்கனிகளை கொடுக்கும் இலையுதிராத மரங்களைப் போலிருப்பார்கள்.
ஜெபம்:
என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிற தேவனே, நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம், எப்போதும், உம்மையே அண்டிக்கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஏசாயா 40:29-31