புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 31, 2023)

தம்முடையவர்களை சேர்த்துக் கொள்வார்

2 கொரிந்தியர் 7:1

பரிசுத்தமாகுதலை தேவப யத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.


கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவி சேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இரு தயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களு க்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படு த்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார் என்ற தீர்க்க தரிசன வார்த்தையை நிறைவேற்று ம்படி ஆண்டவராகிய இயேசு இந்த பூமிக்கு வந்தார். இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதி யுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ் மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மே லும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார் என்ற பிரகாரமாக, மெசியாவாகி நம் இயேசு பாவிகள் மனந்திரும்பி இரட்சிப்படையும் படி அழைக்க வந் தார். அவர் மறுபடியும் வருவார். வரும்போது, அவர் பாவிகளையல்ல, தங்கள் பாவதிலிருந்து மனதிரும்பி, பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, பிதா வாகிய தேவனுடைய சித்தத்தை தங்களுடைய வாழ்விலே நிறைவேற்றி முடித்த, தம்முடைய பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக் கொள் ளும்படி ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக இதோ மேகங்களு டனே வருவார். அதுமட்டுமல்ல, இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவப க்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தை களெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிர மாயிரமான தமது பரிசுத்தவான்க ளோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்ற தீர்க்கதரிசனமும் அந்நாளிலே நிறைவேறும். இன்று பலர் அன்பு என்ற போர்வையிலே பரிசுத்தத்தை சமரசம் செய்கின்றார்கள். பரிசுத்தமி ல்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது. ஒருவரும் அழிந்து போகாதபடிக்கு, கர்த்தர் நீடியபொறுமையுள்ளவராக இருந்து, யாவர் மேலும் தம்முடைய கிருபையை பொழிகின்றார். எனவே, அவருடய கிரு பையை உதாசினப்படுத்தாதபடிக்கும், உங்கள் தவறான வழிகளை நியா ப்படுத்தாதபடிக்கும், சபைகளிலே குழப்பங்களையும் பிரிவினைகளையும் உண்டாக்காதபடிக்கும் வாழ்ந்து, பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடு பூரணப்படுத்துங்கள். 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனு டைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

அன்பில் என்னை பரிசுத்தமுள்ளவனாக்க சித்தம் கொண்ட தேவனே, நான் நல்ல நாட்களை விருதாவாக்காமல், இன்னும் பரிசுத்தமா க்கும்படிக்கு உம்முடைய வார்த்தையின் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - வெளி 19:11-16