புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 29, 2023)

உங்களை தனிப்படுத்தாதிருங்கள்

பிரசங்கி 4:9

ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.


மலை சார்ந்த வெளிகளிலே காளைகள் பெருங்கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான காளைகள் பட்சிக்கின்ற வனவில ங்குகளை காணும் போதெல்லாம், மிரண்டு ஓடுவதுண்டு. அவைகள் கூட் டமாக ஒடும் போது, காட்டில் வாழும் சிங்கங்களோ, புலிகளோ, காண்டா மிருகங்களோ அவைகளை எதிர்த்து நிற்க முடியாது. அவை கள் தங்கள் முன்பாக வரும் யாவ ற்றையும் மிதித்துப் போடும். அத னால், பட்சிக்கின்ற வனவிலங்கு கள், தங்கள் இரைக்காக, ஒரு காளையை அந்தக் கூட்டத்திலிரு ந்து தனிப்படுத்தி, அதை பட்சித்து போடும். அதுபோலவே, எதிராளி யாகிய பிசாசானவனும், கெச்சிக் கின்ற சிங்கத்தைப் போல யாரை விழுங்கலாம் என்று வகை தேடி த்திரிகின்றான். விசுவாசிகள் ஐக்கியத்தைவிட்டு தங்களை தனிப்ப டுத்தும் போது, அவர்கள் பெலனற்றிருக்கின்ற நாடகளிலே, அவர்க ளை இலகுவாக அவன் தன்னுடைய தந்திரமான கண்ணிக்குள் சிக்க வைத்துக் கொள்வான். எனவே, நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப் பட்ட நீங்கள், முதலாவதாக, ஆண்வராகிய இயேசுவோடு ஐக்கியமு ள்ளவர்களாக இருக்க வேண்டும்;. அதை எப்படி அறிந்து கொள்வது? அவன் தன் வாழ்விலே மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்று ஆண் டவர் இயேசு கூறியிருக்கின்றார். ஒரு விசுவாசியானவன், ஆண்ட வர் இயேசுவோடு ஐக்கியமாக இருந்தால், ஆண்டவர் இயேசுவோடு ஐக்கி யமாக இருக்கும் மற்றவர்களோடும் ஐக்கியமாக இருப்பான். ஐக்கிய த்திலே இணைந்து இசைந்திருக்கின்றவர்கள் பெலமுள்ளவாக இருக்கி ன்றார்கள். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவ னுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டி ருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடு ண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது. பிரியமானவர்களே, தேவன் போட்ட எல்லைகளை உடைத்துப் போடாதிருங்கள். படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடை ப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். எனவே, இசைந்த ஆத்து மாக்களாக கிறிஸ்துவின் ஐக்கியத்திலே நிலை கொண்டிருங்கள்.

ஜெபம்:

உம்மோடு ஐக்கியமாக இருக்கும்படி அழைத்த தேவனே, நான் ஐக்கியத்தை உடைகின்றவனாக வாழாமல், நெருக்கடியான நேரங்களிலும் ஐக்கியத்தை வளர்க்கின்றவனாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபி 10:25