புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 28, 2023)

வேண்டப்படாத வேதனைகள்

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத் திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,


ஒரு வீட்டின் முற்றத்தின் ஒருபக்கமாக ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தின் நிழலிலே இருந்து நீங்கள் விளையாடலாம் ஆனால் எந்தக் காரணம் கொண்டும் அந்த மரத்தில் ஏறக்கூடாது என்று தகப்ப னானவர் தன் பிள்ளைகளுக்கு திட்டமாகவும், தெளிவாகவும் கூறியி ருந்தார். ஒரு நாள் தகப்பனானவர், வேலையலுவலாக வெளியூருக்கு சென்றிருந்த போது, இளைய மகனா னவன், அந்த மரத்தின் முதலாவது கொப்பில் ஏறி, அங்கே அமர்ந்து கொண்டு, தன் அண்ணனை நோக்கி: அண்ணா, இங்கே பார், நான் மரத்தில் ஏறிவிட்டேன் என்று பரவசத்துடன் கூறினான். அதைக் கண்ட அண்ணனாவன், தம்பி முதல் கொப்பில் ஏறிவிட்டான் எனவே நான்; மூன்றாம் கொப்பில் ஏறிக் காட்டுவேன் என்று மேலே ஏறி அங்கே இருந்து விட்டான். அந்த மரத்திலே காகம் கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்ததால், காகங்கள் ஒன்றுகூடி அவர்களை தாக்கியதால், அவர்கள் தீவிரமாக இறங்க முற்பட்டபோது, இருவரும் கீழே விழுந்து காயப்பட்டார்கள். அதிகமாக மேலே ஏறிய அண்ணணுக்கு பலத்த காயமும், கொஞ்ச உயரத்திற்கு ஏறிய தம்பிக்கு சின்ன காயங்களும் ஏற்பட்டது. தகப்பனானவர் வீடு திரும்பிய போது, தன் பிள்ளைகளின் செயலை குறித்து மிகவும் கோபமடைந்தார். ஆனால், உயிர் தப்பி யதையிட்டு சந்தோஷப்பட்டார். தாயானவள், தன் கணவனை நோக்கி: ஏன் அந்த மரத்தை வைத்திருக்கின்றீர்கள், அதை வெட்டிப் போடுங்கள் என்றாள். அதற்கு அவர், நாங்கள் இந்த வீட்டில் இருக்கும்வரை அந்த மரம் நிழலுக்கு அவசியமானது. இல்லாவிடில், வெப்ப நாட்களை நாங்கள் தாங்க கூடாமல் போய்விடும் என்று கூறினார். பிரியமான வர்களே, நாம் இந்த உலகத்திலே கொஞ்சக் காலம் வாழ வேண் டியதாக இருக்கி ன்றது. ஆனாலும், நாம் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரித்து அதன் போக்கில் செல்லக் கூடாது என்ற எச்சரிப்பை பெற்றி ருக்கின்றோம். தங்கள் தகப்பனானவரின் சொல்லைக் கேளாமல், அந்த மரத்திலேறிய பிள்ளைகளைப் போல, பரம பிதாவின் சொல்லை மீறி தங்களை உலக போக்கிற்கு ஒப்புக் கொடுகின்றவர்கள், அதனால் உண் டாகும் வேதனைகளை நிச்சயமாக அடைவார்கள். நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். எனவே, இந்த உலகத்திலே தரித்திருக்கும் கொஞ்ச நாட்களிலே, புத்தி யுள்ள பிள்ளைகளைப் போல கீழ்படிவுள்ளவர்ளாக இருப்போமாக.

ஜெபம்:

என் மனதை புதிதாக்கும் பரித்தரே, உம்முடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து, நாளுக்கு நாள் நான் மறுரூபமாகும்படி என்னை உம் வழியில் நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபி 13:14-17