தியானம் (ஐப்பசி 27, 2023)
நிலையற்ற உலக வாழ்வு
சங்கீதம் 39:7
இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.
இன்னும் ஆறு நாட்களிலே, பெரும்புயலொன்றானது அதி வேகமாக இந்த பட்டணத்தைக் கடந்து செல்லும். அதனால், அடுத்த சில தினங் களில், யாவரும் அந்தப் பட்டணத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று அந்த தேசத்தின் அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமான எச்சரிப்பின் அறிவித்தல் விடப்பட்டது. அதை கேட்ட ஜனங்களில் அநேகர், அந்த எச்சரிப்புக்கு செவிமடுத்து, அத்தியவசியமான பொரு ட்களை எடுத்துக் கொண்டு, துரிதமாக அந்தப் பட்டணத்தைவிட்டு வெளியேறினார்கள். ஆனால், சிலரோ, இவர்கள் இப்படித்தான் கூறுவார்கள் ஆனால் அங்கே ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று அந்த எச்சரிப்பை அசட்டை செய்தார்கள். ஆறாம் நாளிலே, விடப்பட்ட எச்சரிப்பின்படி, சடுதியாக, பெரும் புயலானது அந்த பட்டணத்தின் வழியாக கடந்து சென்றதால், அந்தப் பட்டணத்தில் தங்கியிருந்தவர்களில் ஒருவர்கூட தப்பித்துக் கொள்ள முடியாமற் போயிற்று. வரவிருக்கும் அழிவைப் பற்றி எச்சரிப்பை ஏற்று, ஞானமாய் நடந்து கொள்கின்றவர்கள் தங்களை காத்துக் கொள்கின்றார்கள். நம்மு டைய இந்த பூவுல வாழ்க்கையானது நிரந்தரமற்றதாக இருக்கி ன்றது. அதை உணர்ந்து ஏற்றுக் கொள்கின்வர்களின் சிலர், தாங்கள் இச்சித்தவைகள் யாவையும் சீக்கிரமாக நிறைவேற்றுகின்றார்கள். இப்படிப்பட்ட வர்களை மதியற்றவர்கள் என்றும் தூங்குகின்றவர்கள் என்றும் பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஆனால், ஞானமுள்ளவர்களோ, நாட்களை அறியும் அறிவை அடையும் போது, உணர்வடைந்து, தங்கள் வாழ் நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்கின்றார்கள். கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவை யும், என் நாட்களின் அளவு இவ்வளவு தான் என்பதையும் எனக்குத் தெரி வியும். எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்;. ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான் என்று ஒரு தேவ பக்தன் கூறினார். இந்த நிலையற்ற வாழ்க்கையிலே கர்த்தரே நம்முடைய அசையாத நம்பிக்கையாக இருக்கின்றார். இந்த வாழ்க்கை கடந்து போகும் ஆனால் கர்த்தரோ, தம்மைப் பின்பற்றுகின்றவர்களுக்கு நிலையான நகரமாகிய பரலோகத்திலே நித்தியமாக அவரோடு வாழும் பாக்கியத்தை கொடுக்கின்றவராயிருக்கின்றார். எனவே நாட்களை அறி ந்து ஞானமுள்ள பிள்ளைகளாக வாழ்வோமாக.
ஜெபம்:
வெளிச்சத்தின் பிள்ளைகளாக நம்மை மாற்றிய தேவனே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், எப்போதும் விழித்துக் கொண்டு தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 தெச 5:4-8