புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 26, 2023)

நாளைய தினத்தின் மேன்மை

நீதிமொழிகள் 27:1

நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.


ஐசுவரியத்தின் திரட்சியினால் இன்று மனிதர்கள் தங்கள் வாழ் க்கையை குறித்து மேன்மைபாராட்டுகின்றார்கள். இன்று நான் வியா பார அலுவலாக அந்த பட்டணத்திற்கு செல்ல வேண்டும். இன்னும் இர ண்டு மாதங்களில் நான் கப்பலிலே உல்லாசப் பணயம் செல்ல ஆய த்தங்கள் செய்திருக்கின்றேன். என் பிள்ளைகள் உலகிலே பிரபல்பய மான பல்கலைகழகத்திலே படிக்கு ம்படி ஏற்பாடுகளை செய்து வைத்தி ருக்கின்றேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்பு, நாட்களை சந் தோஷமாக கழிக்க, வெளியூரிலே, அடுத்த வருடம், இன்னுமொரு வீட் டை கொள்வனது செய்ய உத்தே சித்திருக்கின்றேன் என்று ஒரு மனிதனானவன் தன் வாழ்கையின் எதிர் கால நடவடிக்கைகளைப் பற்றி பெருமை பாராட்டிக் கொண்டிருந்தான். திட்டமிட்டு வாழ்வதில் தவறில்லை. ஆனால், அந்த திட்டத்திலே தேவ னு டைய சித்தம் எங்கே இருக்கின்றது என்பதை ஒரு மனிதன் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். 'மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கி றவர்களே, கேளுங் கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். இப்பொழுது நீங்கள் உங்கள் வீம்புகளில் மேன்மை பாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங் காயிருக்கிறது.' (யாக்கோபு 4:13-16). என்று இவைகளை குறித்து பரி சுத்த வேதாகமம் கூறும் ஆலோசனைகளையும் எச்சரிப்புக்களையும் கூறு கின்றது. பிரியமானவர்களே, கடந்த நாட்களுக்காக தேவனுக்கு நன் றியை செலுத்துங்கள். இன்றைய நாளிலே கர்த்தருக்குள் மகிழ்சியாய் இருங்கள். நாளைய நாளை கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுங்கள். நம்மு டைய வாழ்க்கையின் மேன்மை என்ன? ஏன் நாம் விசேஷpத்தவர்களாக இருக்கின்றோம்? கர்த்தரை நம் தெய்வமாக கொண்டிருப்பதினாலும், அவர் நம்மோடு இருப்பதினாலுமே நாம் விசேஷpத்தவர்களாக இருக் கின்றோம். எனவே மேன்மை பாராட்ட விரும்புகின்றவன் கர்த்தருடைய கிருபையையும், அவருடை சிலுவைiயும் குறித்தே மேன்மை பாராட்டக் கடவன்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, மேன்மையான அழைப்பை எனக்கு தந்தவரே. இந்த உலகத்தின் மாயையிலே நான் சிக்குண்டு மாளாதபடிக்கு, உம்முடைய வார்த்தையில் உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8