புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 22, 2023)

உபத்திரவங்கள் அதிகமாயிருக்கின்றதே?

2 கொரிந்தியர் 4:17

அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.


மனவேதனைகள் தாங்க முடியவில்லை. எத்தனை காலம் பொறுமையாக இருப்பது? நான் செய்யும் நன்மைக்கு கைமாறாக தீமை செய்கின்றார்கள். மற்றவர்கள் தவறி விழும்போது எத்தனையோ தடவைகள் அவர்களுக்கு ஊன்றுகோலாக இருந்தேன். ஆனால், அவர்கள் எழுந்திருந்த பின்பு, நான் எப்போது விழுவேன் என்று என் அழிவுக்காக காத்திருக்கின்றார்களே. நான் அமைதியாக இருக்கின்றேன் என்று அகங்காரமாக பேசுகின்றார்கள் என்று உத்தமமாக வாழும் விசுவா சியானவன் தன் மனவேதனைகளை கூறிக் கொண்டான். இத்தகைய அனு வங்களுக்கூடாக நாமும் சென்றிருக் கலாம் அல்லது சென்று கொண்டிரு க்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைக ளில் நாம் தீமையை பிணைக்கின்ற வர்களை போலல்லாது, தீமைக்கும் நன்மை செய்கின்ற பக்கத்திலே காண ப்பட வேண்டும். இந்த உலகத்திலே மற்றவர்களிடத்திலே கைமாறு கருதி நன்மை செய்யாமல், விண் கைமாறு மிகுதியாக இருக்கும் படிக்கு, கர்த்தரை நம்பி நன்மை செய்வதையே நாம் நாட வேணடும். நாளுக்கு நாள் உள்ளாள மனிதனானது புதிதாக்கப்பட்டு, ஆண்ட வராகிய இயேசுவின் சாயலிலே வளர்வதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எதிராளியாகிய பிசாசானவன் நம்முடைய விழுகையை எதிர்பார்த்து தன்னுடைய கிரியைகளை, தன் தந்திரங்களுக்கு இடங் கொடுக்கும் வழுப்போகின்ற இருதயமுள்ள மனிதர்கள் வழியாக நடத்தி வருகின்றான். நீங்களோ, விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். நற்கிரி யைகளை நடப்பிப்பதில் சோர்ந்து போகாமல், பிசாசானவனுக்கு எதிர் த்து நில்லுங்கள்;. நம்முடைய போராயுதங்கள் மாம்சத்தின் பெலன் அல்ல. நாம் ஆவியிலே பெலன் கொண்டு, மாம்சத்தை ஜெயிக்கின்ற வர்களாக இருக்கின்றோம். நாம் தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன் மையினாலே வெல்லுகின்றவர்களாகயிருக்கின்றோம். உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிற தென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொரு ந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்ப டுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.

ஜெபம்:

நித்திய கனமகிமைக்கு என்னை அழைத்த தேவனே, ஆண்டவர் இயேசு இந்த உலகத்தை ஜெயித்தது போல, நானும் ஜெயங்கொள்ளு ம்படிக்கு என்னை பெலப்படுத்தி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:17