புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 21, 2023)

கொஞ்சக் காலம்தான்

வெளிப்படுத்தல் 1:3

காலம் சமீபமாயிருக்கிறது.


நாளை ஞாயிற்றுக் கிழமையோடு, இந்த ஊருக்கு வருகை தந்திருக்கும் அந்தப் பிரபல்யமான பாடகர்களின் இசைக் கச்சேரி நிறைவு பெறும். இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கின்றது. இப்படியான சந்தப்பங்கள் உன் வாழ்வில் இனி வருமோ தெரியாது. எனவே, நீ என்னோடு வா என்று ஒரு நண்பனானவன், உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவ னொருவனை வருந்தி அழைத்துக் கொண்டிருந்தான். அந்த வாலி பனோ, நண்பா: இசைக் கச்சேரி நிறைவடைய இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கின்றது. அது போலவே, எங்களுடைய முக்கிய பரீட்சை நாளுக்கும் இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கின்றது. எனவே, நாங்கள் இந்தப் பருவ த்திலே, நேரத்தை விரயமாக்காமல், பரீட்சைக்கு ஆயத்தப்படுவதே எங்களுக்கு அவசியமானது என அவனுக்கு மறுமொழி கூறினான். இவ் வண்ணமாகவே உலகம் இன்று நம்மை அழைக்கின்றது. வாழ்க்கின்ற நாட்களிலே என்னத்தை கண்டீர்கள்? என்னத்தை அனுபவித்தீர்கள்? வாருங்கள்! வயது செல்ல முன்பு, இந்தக் கொஞ்சக் காலத்திலே நாம் உல்லாசமாக இருப்போம் என்று இழுக்கின்றது. ஏனெனில் இந்த உலகமானது சாத்தானின் தந்திரமான வலைக்குள் அகப்பட்டிருக்கின்றது. அவனுக்கு கொஞ்சக் காலம்தான் இருக்கின்றபடியால கெர்ச்சி க்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான். எனவே, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திரு ங்கள்; என்றும், எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதை யுள்ளவர்களாயிருங்கள் என்று பரிசுத்த வேதாகமமம் நமக்கு எச்சரிக்கின்றது. பிரியமானவர்களே, கொஞ்சக் காலம்தான் இருக்கி ன்றது என்பது உண்மை. ஆனால், அந்த கொஞ்சக் காலத்தை நாம் எப்படியாக செலவு செய்யப் போகின்றறோம் என்பதை குறித்து நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். நமக்கு கிடைத்திருக்கும் கொஞ் சக் காலத்தில், மாம்ச இச்சைகளுக்கும் இந்த உலகத்தின் சுகபோக ங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், இந்தப் பூமியிலே வாழும்வரை பிதாவாகிய தேவனின் சித்தத்தை செய்து, நித்திய ஜீவனை பரிசாக பெற்றுக் கொள்வதையே நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அற்பமான உலக ஆசைகளுக்காக நித்தியமான கன மகிமையை இழந்து போய் விடாதபடிக்கு, இந்நாட்களிலே தெளிந்த புத்தியுள்ளவர்களாக மேலான வைகளை நாடித் தேடுவோமாக.

ஜெபம்:

காலங்களையும் நேரங்களையும் அறிந்த தேவனே, இந்த பூமியிலே வாழும் நாட்களிலே உம்முடைய திருச்சித்தத்தை செய்வதையே நான் நோக்கமாக கொண்டிருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:1-13