புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 18, 2023)

ஐக்கிய விருந்து

பிலிப்பியர் 2:2

இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து,


ஒரு சனசமூக நிலையமொன்றிலே சமுகத்தின் ஐக்கிய விருந்தொன்றை வைப்பதற்காக தீர்மானம் செய்திருந்தார்கள். அந்தத் தீர்மானத்தின்படி சில உறுப்பினர்கள், அந்த விருந்துக்குரிய ஆயத்தங்களை துரிதமாக செய்து வந்தார்கள். எப்படிப்பட்ட உணவு வகைகளை தெரிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கலந்துரையாடின போது, சில உறுப்பி னர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளும், வாக்குவாதங்களும் உண்டாயிற்று. ஐக்கிய விருந்தின் நாட்கள் நெருங்கிய போது, நிக ழ்ச்சி நிரல் எப்படியாக இருக்க வேண்டும் என்ற சம்பாiஷனை யில் உறுப்பினர்கள் மூன்று பிரிவாக பிரிந்து விட்டார்கள். இரண்டு பிரிவினர் ஒருவருக்கு ஒருவர் விரோத மான கருத்துக்களுள்ளவர்களாகவும், மூன்றாவது பிரிவினர் இந்த இர ண்டு பிரிவினரோடு சேராதவர்களாகவும் இருந்தார்கள். எனினும், சமூ கம் என்ன சொல்லும் என்று கூறி, பிரிவினைகளை தங்கள் உள்ளத் திலே வைத்துக் கொண்டு, விருந்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் கள். அந்த விருந்தின் முடிவிலே, இந்த ஐக்கிய விருந்து அருமையாக இருந்தது என்று சிலர் பாராட்டினார்கள். நடந்த விவகாரங்களை அறிந்த முதியவரொருவர், விருந்து அருமையாகத்தான் இருந்தது. ஆனால் ஐக் கியத்திற்கு இங்கே இடமில்லை என்று கூறினார். ஆம், பிரியமான வர்களே, சபையிலே நாம் ஐக்கியத்தைக் மேன்மைப்படுத்தி கூறுகின் றோம். ஐக்கிய விருந்துகளிலே பங்குபற்றுமாறு, சபையோருக்கும் விருந்தினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஆனால், விசுவாசிகள் மத்தியிலே இருக்கும் ஐக்கியம் உண்மையுள்ளதாக இருக்கின்றதா என்பதை அவரவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் ஏக சிந்தை யும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன் றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ் மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம். முதலாவதாக ஒவ்வொருவரும் கிறிஸ்துவோடு ஐக்கியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவோடு இசைந்திருக்கின்றவர்களிடத்தில், கிறிஸ்துவிலிருந்த சிந்தை நிறைவாக இருக்கும். அப்பொழுது அவர்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்க ளாய், ஒன்றையே சிந்தித்து, தங்களுக்குரியவைகளை நோக்காமல், பிறருக்கானவைகளை நோக்குவார்கள். அவர்களிடத்தில் உண்மையான ஐக்கியம் உண்டாயிருக்கும்.

ஜெபம்:

ஐக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி என்னை அழைத்த தேவனே, நான் இந்த உலகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும் ஐக்கியத்தில் திருப் தியடையாமல், உம்மோடு ஐக்கியமுள்ளவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:3