புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 17, 2023)

விசுவாசத்திற்கு விரோதமான பேச்சுக்கள்

அப்போஸ்தலர் 12:5

சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினா ர்கள்.


சில வேளைகளிலே தேவ பிள்ளைகள் விசுவாசத்தோடு ஊக்கமாக ஜெபிக்கின்றார்கள். ஆனால், தாங்கள் விசுவாசித்த காரியமானது கைகூடி வரும்போது அதை நம்பமுடியாமல் சந்தேகம் கொள்கின் றார்கள் அல்லது ஜெபம் ஏறெடுக்கப்பட்ட அதே நாவினாலே, ஜெபி த்த பின்னர் தங்கள் விசுவாச அறிக்கைக்கு விரோதமாக எதிரான வார் த்தைகளை அறிக்கையிட்டு கொள்கி ன்றார்கள். அக்காலத்திலே, ஏரோது ராஜா சபையிலே சிலரை துன்பப்ப டுத்த தொடங்கி, யோவானின் சகோத ரனாகிய யாக்கோபை பட்ட யத்தி னால் கொலை செய்தான். அது யூத ருக்கு பிரிமாக இருந்தது என்று அவன் கண்ட போது, ஆண்டவர் இயேசுவின் பிரதான சீஷனாகிய பேதுருவை பிடித்து, கொலை செய்ய மனதாய், பண்டிகை நாட்கள் முடியும்வரைக்கும், இரண்டு சங்கிலிகளால் கட்டி, கடும் காவலிலே வைத்தான். அப்பொழுது, மாற்கு என் னும் பேர் கொண்ட, யோவானுடைய தாயாகிய, மரியாள் வீட்டிலே அநே கர் கூடி ஊக்கமாக ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். பேதுருவின் விடுத லைக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே அவர்கள் ஜெபம்பண்ணி னார்கள். ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, கர்த்தருடைய தூதன் சிறை ச்சாலையில் வந்து நின்று, அதிசயவிதமாக பேதுருவை விடுதலை யாக்கினான். பேதுரு மாற்குவின் தாயாரின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது, ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷ த்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்கு முன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். ஜெபித்துக் கொண்டிருந்த வர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள் தாங்கள் விசுவாசத்தோடு ஊக் கமாக ஜெபித்த காரியம் கைகூடியபோது நம்ப முடியாமல் சந்தே கப்பட்டார்கள். பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர் கள் திறந்தபோது பேதுருவைக் கண்டு பிரமித்தார்கள். சபையோரே, ஊக் கமாக ஜெபம் பண்ணுங்கள். விசுவாச அறிக்கை எப்போதும் உங்கள் வாயிலிருப்பதாக. சந்தேகங்களுக்கு உங்கள் சிந்தையிலே இடம் வேண் டாம். வேத வார்த்தைகளை அறிக்கையிடுங்கள். ஒருமன தோடு விண் ணப்பங்களை ஏறெடுங்கள். நம் ஜெபங்களை கேட்கின்றவர் நம்மோடு இருக்கின்றார்.

ஜெபம்:

ஒரு தகப்பனானவனைப் போல நேசிக்கும் தேவனே, சிறு பிள்ளை களைப் போல கிறிஸ்துவுக்குள் வளர்ந்து வரும் மனிதர்கள்மேல் பொறுமையாக இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக் 3:9-11