தியானம் (ஐப்பசி 16, 2023)
குறைகளை விமர்சிக்காதிருங்கள்
யாக்கோபு 5:16
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனு ள்ளதாயிருக்கிறது.
எனக்காக ஜெபம் செய்யுங்கள் என்று ஒரு மனிதனானவன், தன் இளம் குடும்பத்திலேயுள்ள சில பிரச்சனைகளை ஒரு மூத்த விசுவாசியினி டத்தில் கூறினான். அந்த மூத்த விசுவாசியானவனோ, தான் அறிந்து கொண்ட அந்த இளம் குடும்பத்தின் பிரச்சனைகளை, வேறு சிலரிடம் கூறி, மற்றவர்களிடமும் தெரியப் படுத்தினான். சீக்கிரமாக அந்த இளம் குடும்பத்தினர், தங்கள் பிர ச்சனைகளைக் குறித்து பலர் விம ர்சிக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டதினால், மனம் உடைந்து போனார்கள். சபையின் மூப்பர்கள் அந்த மூத்த விசுவாசியை அணுகி விசாரித்த போது, நான் ஜெபம் பண்ணுபடியாகத் தான் அறிந்த பிரச்சனைகளை மற்றவர்களுக்கு கூறினேன் என்று தன்னை நியாயப்படு;தினான். ஆனால், அவன் அவர்களுக்காக ஜெபித்த நேரத்தைவிட, அவர்கள் பிரச்சனைகளை மற்றவர்களோடு விமிர்சிப்பதற்கு செலவிட்ட நேரமானது பத்துமடங்கு அதிகமாக இருந்தது. கிறிஸ்வின் சரீரமான சபையின் அவயவங்ளாக இருக்கும் சகோதர சகோதரிகளே, நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுகின் றவர்களாக இருக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகைளுடைய பிரச்சனைகளை மற்றவர்கள் விமர்சித்து திரிந்தால் நீங்கள் அதை ஏற் றுக் கொள்வீர்களா? எனவே, உன்னைப் போல உன் அயலானை நேசி என்பதன் பொருளை அறிந்து கொள்ளுங்கள். இப்படியாக, வம்பும், புத் தியீனமுமான பேச்சை பேசுகின்றவர்கள் ஆங்காங்கே இருக்கின்றார் கள். அவர்கள் தேவனை அறிய வேண்டிய பிரகாரமாக இன்னும் அறியவில்லை. அவர்கள் தங்கள் கிரியைகளுக்குரிய பின்விளைவு களை சந்திக்கும் காலம் வரும். அதனால், நீங்கள் உங்கள் விண்ண ப்பங்களை உண்மையாக ஜெபிப்பவர்களிடம் தெரியப்படுத்தாது இரு ந்து விடாதிருங்கள். ஆண்டவர் இயேசு வின் இரத்தத்தினாலே நீதிமான் களாக்கப்பட்டிருக்கின்ற அருமையான சகோதர சகோதரிகளே, இருத யங்களை ஆராந்தறிகின்றவர் உங்கள் சிந்தைகளை அறிகின்றவராகை யால், மற்றவர்களுடைய குறைகளை விமர்சிப்பவர்களுக்கு செவி கொடு க்காமல், அவர்களோடு பங்காளிகளாயிராமல், பரலோக ராஜ்யத்தின் பங்காளிளாகயிருந்து, தேவவார்த்தைக்கு கீழ்படிகின்றவர்;களாக, மனத் தாழ்மையோடு ஒருவருக்காக ஒருவர் ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணும் ஞான முள்ள இருதயத்தை எனக்கு தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபேசியர் 5:4