புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 15, 2023)

உண்மையுள்ளவன் யார்?

எபேசியர் 4:25

பொய்யைக் களைந்து, அவ னவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.


ஒரு மாலைப் பொழுதிலே, மேய்ப்பரானவரொருவர், தன் உதவி ஊழியக்காரனோடு, ஒரு விசுவா குடும்பத்தின் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை எப்படியாக இருக்கின்றது? யாவரும் அனுதினமும் வேதம் வாசிக்கின்றீர்களாக? யாவரும் அனுதினமும் ஜெபிக்கின்றீர்களாக என்று மேய்ப்பரானவர் கேட்டார். அதைக் கேட்ட தாயானவள், அதையெல் லாம் ஏன் கேட்கின்றீர்கள் ஐயா, இங்கு ஒருவரும் அப்படி செய் வதை நான் பல மாதங்களாக காண வில்லை. யாரைக் கேட்டாலும் நேர மில்லை என்று சொல்கின்றார்கள் என்று குடும்பத்தின் ஆவிக்குரிய நிலைமையை விவரித்துக் கூறினாள். அதை பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த மேய்ப்பரானவர், இந் தக் காரியங்களிலே நீங்கள் முன்னேற வேண்டும் என்று சாந்தத்தோடு கூறி, ஜெபம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். போகும் வழி யிலே உதவி ஊழியக்காரன் அந்த மேய்ப்பரானவரை நோக்கி: நீங்கள் அவர்களைக் கடிந்து கொண்டு, கண்டனம் பண்ணி, புத்திசொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர்கள் செய்வது சரி என்ற பிரகார மாக நீங்கள் அவர்களோடு தயவாய் பேசியதை கண்டு நான் ஆச்சரி யப்பட்டேன் என்றான். அதற்கு மேய்ப்பரானவர்: அவனை நோக்கி: மகனே, கண்டனத்திற்கும், கடிந்து கொள்ளுதலுக்கும் காலமும் நேரமும் உண்டு. வைத்தியரிடம் சென்று தன் நோய்களை குறித்து கூறுகின்றவர் களை கண்டனம் செய்வதால் அவன் நோய்கள் குணப்படுவதில்லை. வைத்தியர் முதலாவதாக வைத்தியம் செய்கின்றார். அவர்களும் தங் களை நீதிமான்களாக காண்பிக்க விரும்பியிருந்தால், தாங்கள் தவ றாமல் வேதம் வாசித்து ஜெபிக்கின்றோம் என்று கூறியிருக்கலாம். அவ ர்கள் அப்படிச் செய்யாமல், தங்கள் உண்மை நிலைமையை கூறியி ருக்கின்றார்கள். அவர்களிடத்திலே உண்மை உண்டு. அவர்களை நாங் கள், மெதுவாக ஆவிக்குரிய வாழ்க்கைக்குள் நடத்த வேண்டும். அவர் கள் வீட்டிற்கு நாங்கள் சென்று சிலஜெபக்கூட்டங்களை வைத்து, அவ ர்களை ஊக்குவிக்க வேண்டுமென்று கூறினார். பிரியமானவர்களே, வரு த்தத்தோடு வாழ்பவன் வைத்தியரிடம் சென்று எனக்கு நல்ல சுகம் என்று கூறினால், வைத்தியர் அவனுக்கு உதவி செய்ய முடியாது. நீங் கள் உண்மையுள்ளவர்களாக இருக்கின்றீர்களா என்று இன்று உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். ஒருவருக்கொருவர் அவயவ ங்களாக இருக்கின்றபடியால், பொய்யை களைந்து உண்மையைப் பேசுங்கள்.

ஜெபம்:

குணமாக்கும் தேவனே, நான் முற்றிலும் குணப்படும்படி, பொய்யை களைந்து, உம்முடைய சமுகத்திலே எப்பொழுதும் உண்மையு ள்ளவனாக இருக்கும்படி எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13