தியானம் (ஐப்பசி 14, 2023)
நலமானதை எப்படி பற்றிக் கொள்வது?
1 தெச 5:21
எல்லாவற்றையும் சோதித் துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
தூரத்திலிருக்கும் ஊரொன்றிலிருந்து ஒரு ஸ்திரியானவள், தன் மகனானவனோடு தேவ ஆலயத்திற்கு வந்திருந்தாள். ஆண்டவர் இயேசுவை அறியாத அவர்கள், சில வாரங்கள் ஆராதனைக்கு வந்த பின்னர், சில விசுவாசிகள் அவர்களுடைய நோக்கத்தை அறிந்து கொண்டார்கள். அந்த ஸ்திரியானவளுடைய, மகனானவன் திருமண வயதையுடைய வனாக இருந்ததால், அவனுக்கு ஒரு பெண்ணை பார்க்கும்படிக்கு சபைக்கு வந்திருந்தார்கள். ஆலயத்திற்கு செல்லும் பெண்கள் பொது வாக புருஷனுக்கு கீழ்படிந்திருப்ப டிந்திருப்பார்கள், எனவே எப்படி யாவது ஒரு பெண்ணை பொருத் தம் பார்க்கலாம் என்பதே அந்த ஸ்திரியானவளுடைய நோக்கமாக இருந்தது. திருமணத்திற்காக ஞானஸ்நானம் எடுப்பதற்கோ அல்லது திருமணத்தை சபையிலே வைப்பதற்கோ எந்ததடையும் இல்லை என் றும் கூறியிருந்தாள். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, மறு வாழ்வு, தேவனுக்கு பயந்து அவர் வழியில் நடத்தல், நித்திய ஜீவன் இவைகளைக் குறித்த எந்த எண்ணமும் அவளித்தில் இருக்கவில்லை. மனித குலத்திற்கு இரட்சிப்பு இயேசுவால் மட்டுமே உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் மனதுமில்லை. ஆனால், இரட்சிப்படையாத தன் மக னானவனுக்கு ஒரு நல்ல பெண் அமைந்தால் போதும் என்பதே அவளு டைய நோக்கமாக இருந்தது. பிரியமானவர்களே, மனுஷர் நித்திரை பண்ணுகையில் சத்துருவானவன் வந்து, கோதுமைக்குள் களைகளை விதை த்துவிடுகின்றான். சிலர் ஆட்டுத்தோலை போர்த்துக் கொண்டிருக்கும் பட்சிக்கின்ற ஓநாய்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்தி க்கிறார்கள். எனவே, மற்றவர்களுடைய வாழ்க்கையை நீங்கள், அவர்கள் தோற்றம், கல்வி, உத்தியோகம், ஆஸ்தி, குடும்பப் பின்ணனியை, சமுக அந்தஸ்துகளை வைத்து நிதானித்து அறியாமல், அவர்களுடைய கனிக ளாலே அவர்களை அறிந்து கொள்ளுங்கள். பதட்டப்பட்டு வாழ்க்கையின் முக்கிய தீர்மானங்களை தீவிரமாக எடுக்காமல், பொறுமையுள்ளவர்க ளாக இருங்கள். தேவ உங்களுக்கு நியமித்த அவருடைய நன்மை களை அவர் குறித்த காலத்திலே நிறைவேற்றி முடிப்பார். தேவ ஆலோ சனையை கூறுபவர்களுக்கு செவிகொடுங்கள். தேவனுடைய ராஜ்ய த்தையும் அவருடைய நீPதியையும் வாழ்வில் முதன்மையாக்கிக் கொள் ளுங்கள். எப்பொழுதும் ஜெபத்திலே தரித்திருங்கள்
ஜெபம்:
சகலமும் அறிந்து தேவனே, நான் ஒருபோதும் மாம்சத்திலே வாழ்வின் தீர்மானங்களை எடுக்காமல், பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலக எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 19:20-21