புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 13, 2023)

பயபக்தியோடு ஆராதனை செய்யுங்கள்

யோவான் 2:16

என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.


ஒரு கணக்கியல் நிபுணராக பணியாற்றி வந்த விசுவாசியொருவன், தன் வேலை அலுவலாக ஒரு சிறிய வியாபார ஸ்தாபனத்தின் உரிமையா ளரோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். அந்த வேளை யிலே அந்த ஸ்தாபன உரிமையாளர், அந்த விசுவாசியை ஞாயிற்றுக் கிழமை சந்திக்க முடியுமா என்று கேட்டார். அதற்கு அந்த விசுவாசி யானவன்: ஞாயிறு நான் ஆல யத்திற்கு செல்ல வேண்டும். எனவே இன்னுமொரு நாளிலே சந்திப்போம் என்றான். அதைக் கேட்ட ஸ்தாபனத்தின் உரிமையாளர், உடனடியாக, அப்படியானால், நான் உன்னை ஆலயத்தில் சந்திக்கின்றேன். நான் ஆராதனைக்கு வருகின்றேன் என்றார். தேவனை தேடும்படிக்கு அல்ல, அவர், சபையோர் மத்தியிலே விசுவாசியாக இருந்த கணக்கியல் நிபு ணருக்கு அறிமுகமானவர் என்று காண்பித்து, அந்த செல்வாக்கி னாலே, சபையிலும் தன் வியாபார விற்பனைப் பொருட்களை அறிமு கப்படுத்தலாம் என்ற நோக் கமுடையவராக இருந்தார். அதனால், அந்த கணக்கியல் நிபுணராக இருந்த விசுவாசியானவன், ஸ்தாபன உரிமை யாளரை இன்னுமொரு நாளிலே சந்திக்கும்படி வேண்டிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று பல இடங்களிலே ஆலய ங்களை தங்கள் சொந்த நோக்கத்திற்காக துஷ;பிரயோகம் செய்யும் மனிதர்கள் பெருகி வருகின்றார்கள். சில விசுவாசிகளும்கூட தங்கள் இழிவான ஆதாயத்திற்காக இத ற்குள் இழுப்புண்டு போய், சபையிலே பல குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றார்கள். ஒரு சமயம் ஆண்டவர் இயேசு பண்டிகையின் நாட்க ளிலே எருசலேம் தேவாலயத்திற்பு சென்ற போது, தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயி ற்றினால் ஒரு சவுக் கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமா டுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரரு டைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். எனவே, தேவ ஆலயத்திற்கு செல்வதன் முதன்மையானதும் அவசியமானதுமான நோக்கத்தை நீங்கள் அறிந்து பயபக்தியோடு தேவனுக்கு ஆராதனை செய்யுங்கள். உங்கள் கிரியைகளினால் பெலவீ னமுள்ளவர்கள் இடறலடைந்து பின்வாங்கிப் போகாதபடிக் எச்சரிக்கை யுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, பரிசுத்த அலங்காரத்தோடு உம்மை ஆராதிக்கும்படிக்கு, அலங்கோலமானவைகளை உம் ஆலய பிரகாரங் கிலே நடப்பிக்காமலிருக்க எனக்கு கற்று தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலி 3:18-20