தியானம் (ஐப்பசி 12, 2023)
தன் குற்றங்களை உணருகிறவன் யார்?
சங்கீதம் 19:14
என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீ தியாயிருப்பதாக.
சமுதாயத்தினால் சிறப்பு குடிமகனாக கருதப்பட்ட பரிசேயனானவன் தேவ ஆலயத்திற்கு சென்றான். அவன் பல நன்மையான காரியங்களை தன் வாழ்விலே செய்திருந்தும், தன் உண்மை நிலைதையை உணராதவ னாக தேவனுடைய சமுகத்திற்கு சென்றான். தன்னை நீதிமானென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணுகின்ற இருதயமுடையவனாக அவன் இருந்தான். பல வார்த்தை களை தேவசமுகத்திலே பேசினான். ஆனால், அவனோ பாவியாக தேவ னுடைய சமுகத்திற்கு வந்து, அப் படியே பாவியாகவே வீடு திரு ம்பினான். தன் பிழைகளை உண ருகிறவன் யார்? தன் மறைவான குற்றங்களை அறிகின்றவன் யார்? துணிகரமான பாவத்திற்கும், பெரும் பாதகத்திற்கும் நீங்கலாகியிருப் பவன் யார்? கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர் ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாய ங்கள் செம்மை யும், இருதயத்தைச் சந்தோஷpப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிற துமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. பிரியமானவர்களே, கர்த்தருடைய வேதமே ஒரு மனுஷனுடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்க முடியும். அவருடைய வார்த்தைகளே கண்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கும். அந்த வார்த்தைகளை தன் இருதயத்திலே வைத்திக்கி ன்றவனே உணர்வுள்ள மனுஷனாக இருக்கின்றான். ஒருவேளை நம்முடைய தகுதி தராதரம் இந்த உலகத்தினால் அங்கீகாரம் பெற்றதாக இருக்கலாம். நம்முடைய பேச்சுக்கள் மனிதர்களுடைய பார்வையிலே ஏற்புடையதாக இருக்கலாம். சக விசுவாசிகள் நம்முடைய இருதயத்தின் தியானங்களைக காணாதவர்களாக இருக்கலாம். ஆனால், இருதயங் களை ஆராய்ந்தறிகின்ற தேவன் முன்னிலையிலே நாம் உண்மையுள்ள வர்களாக காணப்படும்படி வேதத்தின் வழியிலே நடப்போமாக.
ஜெபம்:
இளைப்பாறுதல் தரும் தேவனே, உம்முடைய சமுகத்திலே என் வார்த்தைகள் உண்மையாய் இருக்கும்படிக்கு, உம் வார்த்தையின் வழியில் வாழும் உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 119:9-10