புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 11, 2023)

தேவனை தேட ஆலயத்திற்கு செல்கின்றவன்

2 கொரிந்தியர் 13:5

உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்.


சமுதாயத்தினால் சிறப்பு குடிமகனாக கருதப்பட்ட பரிசேயனும், பாவி யென்று புறக்கணிக்கப்பட்ட ஆயக்காரனும் ஜெபம் பண்ணும்படி தேவ ஆலயத்திற்கு சென்றார்கள் என்று ஆண்டவர் இயேசு கூறிய உவமை யை நீங்கள் யாவரும் அறிந்திருக்கின்றீர்கள் (லூக்கா 18:10-14). தன் நிலை மையை நன்கு உணர்ந்த ஆயக்காரன், ஆலயத்திற்கு கிட்டே செல்ல துணியாமல், தூரத்திலே நின்றான். அவன் தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் என் றான். இந்த மனிதன் ஆலயத் திற்கு சென்ற காரணம் என்ன? அவன் தன்னைத் தானே தேவசமுகத் திலே தாழ்த்தினானா? அல்லது தன் கிரியைகளைக் குறித்து மேன்மை பாராட்டி தன் பாவங்களை நியாயப்படுத்த முயன்றானா? அவனிடம் துணிகரமான பேச்சு? துணிகரமான பார்வை? துணிகரமான சிந்தனைகள் ஏதாவது இருந்ததா? சற்று சிந்தித்துப் பாருங்கள்! பிரியமானவர்களே, துன்மார்க்கத்தில், பாவத்தில் மூழ்கி கிடைப்பவர்களும், சன்மார்க்கரும், தேவனுக்கு பயந்து அவர் வழியிலே வாழ்பவர்கள் யாவரும் தேவ ஆல யத்திற்கு செல்ல முடியும். ஆண்டவராகிய இயேசு ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். ஆனால், தேவ ஆலயத்திற்கு செல்வதன் நோக்க த்தை அவனவன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இன்றைய நாட்களிலே, சிலர் தங்களது வியாபர நலன்களுக்கு வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்வதற்காகவே தேவ ஆலயத்திற்கு செல்கின்றார்கள். வேறுசிலர் திருமணத்திற்காகவும், விசேஷ நிகழ்சிகளுக்காகவும், பொழுது போக் கிற்காகவும் தேவ ஆலயத்திற்கு செல்கின்றார்கள். இன்னும் சிலர், வேறு தகாத நோக்கங்களுக்காக தேவ ஆலயத்திற்கு செல்கின்றார்கள். தேவ ஆலயத்திற்கு சென்று இப்படியாக தேவனுக்கு பயந்து அவர் வழி யில் வாழ தங்களை ஒப்புக் கொடுக்காமல், வேறு நோக்கங்களுக்காக செல்கின்றவர்கள், தங்கள் வழிகளை நியாயப்படுத்த கர்த்தர் வெளி தோற்றத்தையல்ல இருதயத்தையே பார்க்கின்றார் என்று கூறி, வாக்கு வாதங்களையும் விதண்டாவாதங்களையும் உண்டு பண்ணி தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராகி விடுகின்றார்கள். பிரியமானவர்களே, தேவனை தேடுகின்றவனின் உள்ளத்திலே தாழ்மையிருக்கும். அந்த தாழ்மை அவன் கனிகளால் வெளிப்படும். மனந்திரும்புகின்ற எந்தப் பாவியையும் கர்த்தர் ஏற்றுக்கொள்கின்றார். எனவே, எப்பொழுதும் உங்கள் நிலைமையை நன்கு உணர்ந்தவர்களாக தேவ சமுகத்தில் உங்களை தாழ்த்துங்கள்.

ஜெபம்:

எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் தேவனே, என் விசுவாச வாழ்க்கையை நான் உம் வார்த்தையின் வெளிச்சத்தில் சோதித்தறிந்து, உம்மைக் கிட்டிச் சேர உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசேக்கியல் 33:11