புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 09, 2023)

வாழ்வில் வளர்ச்சி உண்டா?

லூக்கா 2:52

இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்


தன்னுடைய மகனானவன், நெடுஞ்சாலையிலே அவனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக ஓடிச் செல்கின்றான் என்று அறிந்து கொண்ட அவனுடைய தகப்பனானவர், அவனை அழைத்து, மகனே, உன் மோட் டார் சைக்கிளை உன் விருப்பப்படி வாங்கியிருக்கின்றாய். அதிவேகமாக செல்லாதே. கவனமாக ஓட்டிச் செல்லு. சிறிய தவறு பாரிய பாதிப்பை கொண்டு வரும் என்று அறிவுரை கூறினார். அதற்கு அவன்: அப்பா, உங்களுக்கு வயது சென்றபடியால் நான் அதிவேகமாக ஓட்டுவதைப் போல உங்களுக்கு தெரிகின்றது. நீங்கள் ஒருகாலும் மோட்டார் சைக் கிள் ஓடியதில்லையே, உங்களுக்கு அதைப் பற்றி தெரியாது என்று கூறி, மகனானவன் தன் தகப்பனா னவரின் அறிவுரையை அலட்சியம் பண் ணிக் கொண்டான். அதைக் கவனித்த தகப்பனானவர் மனமு டைந்து போனதைக் கண்ட தாயார், தகப்பனானவரை நோக்கி: அவன் இப் போது சின்ன பையன் அல்ல. அவன் வளர்ந்து விட்டான். அவனு க்கு இப்போது இருபது வயது என்றாள். அதற்கு தகப்பனானவர்: அவன் சரீரத்திலும், வயதிலும், முதியோரின் ஆலோசனையை அசட்டை பண் ணுவதிலும் வளர்ந்தது உண்மை. ஆனால் அவன் பொறுப்புணர்ச்சியி லோ, கீழ்ப்படிவிலோ வளரவில்லை என்று கூறினார். ஒருநாள் அவன் அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதைக் கட்டுப்படுத்த முடியாமல், பெரிதான விபத்தொன்றிலே அகப்பட்டு, கடும் காயங்க ளுடன் உயிர்தப்பிக் கொண்டான். பிரியமானவர்களே, நீங்கள் ஆண்ட வர் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு எத் தனை வருடங்கள் கடந்து விட்டது? எந்தெந்த காரியங்களில் நீங்கள் வளர்ந்திருக்கின்றீர்கள்? சிலர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதிலும், வேறு சிலர் பிரச்சனைகளை உருவாக்குவதிலும்; வளர்ந் திருக்கின்றா ர்கள். இன்னும் சிலர் மன்னிப்பை வழங்குவதிலும், வேறு சிலர் கசப் பை மனதில் வளர்ப்பதில் வளர்ந்திருக்கின்றார்கள். மேலும், வேதத் தின் தியானம், ஜெபம், சபைகூடிவருதல், தான தர்மங்கள் போன்ற காரி யங்களில் நீங்கள் வளர்ந்திருக்கின்றீர்களா? வேத கீழ்ப்படிவும், மனத் தாழ்மையும் விருத்தியடைத்திருக்கின்தா அல்லது அந்த வாலிபனைப் போல குறுகியிருக்கின்றதா? நம்முடைய ஆண்டவர் இந்த உலக பெற் றோருக்கும், பரம பிதாவிற்கும் முடிவு பரியந்தமும் கீழ்படிவுள்ளவ ராகவே இருந்தார்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கின்ற தேவனே, உம்மு டைய வார்த்தைக்கு செவிகொடுப்பதே என் வாழ்வில் முதன்மை யாக இருக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:8