புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 08, 2023)

நீங்கள் முதிர்ச்சியடைந்தவர்களா?

எபேசியர் 4:11

மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட் டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்


உயர்தர கல்வியை கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவனானவன், பல ஆண் டுகளுக்கு பின்பு, தன் பாலர் வகுப்பு ஆசிரியை காணும்படி சென்றி ந்தான். புதிய ஆண்டின் ஆரம்ப நாட்களாக இருந்தபடியால், பல புதிய பிள்ளைகள் பாலர் வகுப்பிலே சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் சிலர், பிடிவாதமாக அழுது கொண்டிருந்தார்கள். வேறு சிலர், சக மாணவர்களைபற்றி முறையீடு செய்து கொண்டார்கள். இன்னும் சிலர், அங்குமிங்குமாய் ஒடி பல குழப்ப ங்களை ஏற்படுத்திக் கொண்டிருந் தார்கள். சிறிது நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்த உயர்தர மாணவனானவன், ஆசிரியையை நோக்கி: டீச்சர், இவர்களை நீங்கள் செம்மையாக தண்டித்து, ஒழுங்கு படுத்த வேண்டும் என்று கூறினான். அதை கேட்ட அந்த ஆசிரியை, சிரித்துவிட்டு, மகனே, இவர்கள் வீட்டிலிருந்து, வெளி உலகத்திற்கு வந்து ஒரு சில வாரங்கள்தான் கடந்திருக்கின்றது. தங்கள் சொந்த வீட்டிலே தாங்கள் நினைத்தபடி காரியங்களை செய்திருப்பார்கள். எனவே, மற்றவர்களோடு சேர்ந்து வாழ்வதற்கு அவர்கள் பழகிக் கொள்ள கொஞ்சம் காலம் எடுக்கும். படிப்படியாக, பொறுமையோடு அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, நெறிப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், நீ இவர்களைவிட அதிக புரளிகளை பண்ணி னாய். ஆனால், இன்று நீ எப்படியாக முதிர்ச்சியடைந்திருக்கின்றாய் பார். இது பல்கலைக்கழகமல்ல, மாறாக இது பாலர் ஆரம்ப பாடசாலை என்று அவனுக்கு பதிலளித்தார். பிரிய மான சகோதர சகோதரிகளே, இத்தகைய செயற்பாடுகளை ஒருவேளை நீங்கள் செல்லும் சபையிலே கண்டிருக்கலாம். அதாவது, ஓய்வுநாள் பாடசாலையில் இருக்கும் சிறுவர்கள் அல்ல. வயது வந்த மனிதர்கள் சிறு குழந்தைகளைப்போல பிடிவாதமுள்ளவர்களாகவும், முறையீடு செய்கின்றவர்களாகவும், அங்கு மிங்குமாய் சென்று குழப்பங்களை ஏற் படுத்துகின்றவர்களுமாய் இருப்பார்கள். ஒருவேளை நீங்கள் இப்போது முதிர்சசியடைந்திருக்கலாம், அப்படியானால், கர்த்தர் நீடிய பொறு மையுள்ளவராக இருப்பது போல, நீங்கள் பொறுமையு ள்ளவர்க ளாக இருங்கள். ஒரு காலத்திலே நீங்களும் அப்படி இருந்தீர்கள் அல்லவா?

ஜெபம்:

உம்முடைய குமாரனாகிய இயேவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்த தேவனே, நான் குழந்தைதனமான காரியங்களைவிட்டு, கிறிஸ்து இயேசுவின் சாயலிலே வளரும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:9