புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 07, 2023)

யார் பாவிகள்?

ரோமர் 3:23

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,


ஆண்டவராகிய இயேசு பாவிகளோடு கூட்டுறவு கொள்ளும்படி இந்த உலகத்திற்கு வரவில்லை. மாறாக பாவிகள் தங்கள் நிலைமையை உண ர்ந்து, மனந்திரும்பி, புதிய வாழ்வு வாழும்படி அவர்களுக்கு வழியை காட்டும்படி வந்தார். பாவிகள் யார்? 1. மனிதர்களில் சிலர் வெளிய ரங்கமாக குடித்து, வெறித்து, மனிதர்கள் காணும்படி தகாத காரியங் களிலே ஈடும்படும் போது அவர்கள் பாவிகளும், கீழ்தரமானவர்களும் என்று அழைக்கப்பட்டார்கள். (லூக்கா 5:30) 2. ஏரோது ராஜா மற்றும் பல அதிகாரிகள் பெரும் மாளிகைக்குள்ளே வாழ்ப்பவர்கள், யாரும் அறியாமல் களியாட்டங்க ளிலும், விபசாரங்களிலும் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியிலே சன்மார்க்களைப் போல காணப்பட்டார்கள். 3. வேறு சிலர், ஆலயங்களிலே முக்கிய ஆசனங்க ளிலே அமர்ந்திருந்து, மிகவும் கொடுமையான பெருமையுள்ள நெஞ்சம் கொண்டவர்களாக, தங்களை நீதிமான்களாக காண்பித்தார்கள். (யோவான் 9:41). மேற்குறிப்பிட்ட குழுக்களில் ஐசுவரியவான்களும், சாராசரி வருமானமுடையவர்களும், ஏழைகளும் அடங்கியிருந்தார்கள். இவர்கள் யாவரும் பாவிகளாகவே இருந்தார்கள். எல்லாரும் பாவஞ் செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள் ஆனாலும் எல்லாரும் கிறி ஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படும்படி தேவ கிருபையானது வெளிப்பட்டது. (ரோமர் 3:23-24). முதலாவதாக, மனிதர்கள் எந்தக் குழுவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் ஆத்துமாவிற்கு இரட்சிப்பு அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படியாக உணர்வடைந்து, மனந்திரும்ப, ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கின்றவர்கள், நீதிமான்களாக மாற்றப்படுகின்றார்கள். இது மனித முயற்சிகளினால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. இப்படியாக நீதிமான்களா க்கப்பட்டவர்கள், திராட்சை செடியாகிய இயேவில் கிளைகளாக இணைக்கப்படுகின்றார்கள். இந்த இணைப்பானது அவர்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையில் கொடுக்கும் கனிகளால் உறுதிப்படுத்தப்படும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது. கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். (மத்தேயு 7:18-19). எனவே நாம் நம்முடைய அழைப்பை உணர்ந்தவர்களாக நம் வாழ்விலே நற்க னிகளை கொடுப்போமாக.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ என்னை வேறுபிரித்த தேவனே, கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று கனியற்ற வாழ் க்கையை விட்டுவிட்டு, நற்கனிகளை கொடுக்கும்படி என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6