புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 06, 2023)

இயேசுவின் நண்பர்கள் யார்?

யோவான் 15:14

நான் உங்களுக்குக் கற்பிக்கிறயாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.


இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, ரோமருக்காக வரி வசூலிப்பவர்கள், அநியாயக்காரரும், பறிகாரரும், துரோகிகளும் என்று யூதரால் கருதப்பட்டார்கள். ஒரு சமயம் மத்தேயு வீட்டிலே இயேசு போஜனபந்தியிருக்கையில், அநேக வரி வசூலிப்பவர்களும், பாவிக ளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிரு ந்தார்கள். அதைக் கண்ட வேதபார கரும் பரிசேயரும், இயேசுவின் சீஷரை நோக்கி: உங்கள் போதகர் வசூலிக்கின்றவர்களோடும், பாவிக ளோடும் போஜனபானம் பண்ணுகிற தென்னவென்று கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: பிணியா ளிக ளுக்கு வைத்தியன் வேண்டியதேய ல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். இந்த சம்வத்திலே காணப்படும் நீதிமான்கள் யார்;? பாவிகள் யார்? சற்று சிந் தித்துப் பாருங்கள். ஆண்டவர் இயேசுவை தவிர இந்த சம்பவத்திலே காணப்படும் யாவரும் பாவிகளாக இருந்தார்கள். ஆனால், வரி வசூலி ப்பவர்களும், மற்றய பாவிகளும் தங்களை பாவிகள் என்று ஏற்றுக் கொள்ளும் மனதையுடையவர்களாக இருந்தார்கள். ஆனால், வெள்ளை யடிக்கப்பட்ட கல்லறைகளாக இருந்த பரிசேயரும், வேதபாரகரும் தங் கள் பரிதாப பாவ நிலைமையை உணராதபடிக்கு, தங்கள் இருதயத்தை கடினப்படுத்தி, தங்களை நீதிமான்களாக காண்பித்தார்கள். அதனால், ஆண்டவர் இயேசு அவர்களை மிகவும் கடினமாக கண்டித்துப் பேசி னார். எனவே, ஆண்டவராகிய இயேசு பாவிகளின் நண்பன் அல்ல. அப் படியானால் கொடும் பாவிகளாக இருந்த பரிசேயர் வேதபாரகரோடும் அவர் நட்பாக இருந்திருப்பார். பாவிகள் தங்கள் பாவத்தில் வாழாமல், மனந்திரும் பும்படிக்கு அவர்களை அழைத்தார். நாம் ஆண்டவர் இயேசு வின் நண்பனாக இருக்க கூடுமோ? ஆம், நாம் ஆண்டவர் இயேசுசின் நண்பனாக இருக்க முடியும். எப்படி ஒருவன் அவருடைய நண்பனாக இருக்க முடியும்? ஆண்டவர் இயேசு கற்பிக்கிற யாவையும் செய்கின் றவர்கள் அவருக்கு நண்பர்களாக இருக்கின்றார்கள் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். எனவே, பாவத்திலே தரித்திருக்காமல், அவருடைய வார்த்தையின் வழியிலே வாழ ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

பாவிகள் மனந்திரும்பும்படி அழைக்கின்ற தேவனே, நான் தங்கள் மனதை கடினப்படுத்திய பரிசேயர், வேதபாரகரைப் போல வாழாமல், பாவ ங்களை அறிக்கையிட்டு விட்டுவிடுகின்றவனாக வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 5:31-32