புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 05, 2023)

சகிப்புத்தன்மையுடைவர்கள்

கொலோசெயர் 3:13

ஒருவரையொருவர் தாங்கி, ஒரு வர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.


பிள்ளைகள் படித்து வரும் பாடசாலைகளிலும், நாங்கள் வேலை செய்யும் இடங்களிலும், காலத்திற்கு காலம் ஒழுங்கு முறைகளை மாற்றி, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றார்கள். அண்மைக்காலங்க ளிலே கைத்தொலைபேசி சாதனம், மாணவர்கள் மத்தியிலே பரவ லாக உபயோகிக்கப்பட்டு வருவதால், சில நாடுகளிலே, மாணவர்கள் அதனை பாடசாலை வகுப்புக்க ளுக்கு கொண்டு வரமுடியாது என்று தடைச் சட்டங்களை அமு ல்படுத்தி வருகின்றார்கள் என்று, செய்திகள் வாயிலாக அறிகின்றோம். அதுமட்டுமல்லாமல், இன் றைய நாட்களிலே தேவவார்த் தையானது, பாவம் என்று கூறு கின்ற காரியங்களையும் சிலர் நன்மையென்று கருதி, பாவமான காரியங்களையும் புதிய ஒழுங்கு முறைகளாகவும், சட்டதிட்டங்களாகவும் அமுல்படுத்தி வருகின்றார்கள். அவைகள் மனிதர்களுக்கு நன்மையானவைகள் என்று எண்ணுகின்றார்கள். சில தேவ பிள்ளைகளும் இவைகளில் இழுப்புண்டு போய்விடுகின்றார்கள். இப்படியாக மாறிக் கொண்டிருக்கும் உலகிலே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்கும்படியாக பாடசாலைக்கு தவறாமல் அனுப்பி வைக்கின்றார்கள். அப்படியாகவே கோணலும் மாறு பாடுமான உலகிலே பிழைப்புக்காக பல்தரப்பட்ட வேலைகளை செய் துவருகின்றோம். ஊக்கமாக கல்வி கற்க வேண்டும், நன்றாக உழகை;க வேண்டும் என்ற காரணங்களினாலே எல்லா ஒழுங்கு முறைகளையும், ஒழுங்கீனங்களையும், சட்டதிட்டங்களையும், சட்டவிரோதமான செயல்களையும் காணும்போது, அவைகளால் தங்களை கறைப்படுத்திக் கொள்ளாமல், அவைகளை சகித்துக் கொள்கின்றோம். ஆனால், அதே மனி ர்கள், தேவசபைகளிலே நன்மை கருதி அமுல்படுத்தப்படும் ஒழுங்கு முறைகளை குறித்து எதிர்த்து விவாதம் செய்வதற்கு எப்போதும் ஆய த்தமுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். சிலவேளைகளிலே, சபைகளிலே விசுவாசிகள் மத்தியிலே சில குறைகளை காணும்போது, சகித் துக் கொள்ள முடியாமல் விசனமடைந்து குழப்பங்களையும், கலகங்க ளையும், பிரிவினைகளையும் சிலர் ஏற்படுத்தி விடுகின்றார்கள். பிரியமான வர்களே, இந்த உலகத்திலுள்ள அழிந்து போகின்ற ஐசுவரியத்திற்காக பிரயாசப்படுவதைவிட மிக அதிகமாக நித்திய வாழ்விற்காக பிரயா சப்படுங்கள். நீடிய பொறுமையோடு முன்னேறிச் செல்லுங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமாகிறவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று சொன்ன தேவனே, கறைதிறையற்ற பிள்ளைகளாக உமக்கு முன்பாக நிற்கும் நாள் வரைக்கும் பொறுமையோடு முன்னேற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலி 4:5-7