புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 04, 2023)

ஒழுங்கு மீறி நடப்பவர்கள்

எபேசியர் 5:17

ஆகையால், நீங்கள் மதியற்ற வர்களாயிராமல், கர்த்தரு டைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.


அந்த மனிதனானவன் சபையின் ஒழுங்கு முறைகளை மீறி நடக்கின்றான் என்று யாவரும் அறிந்திருக்கின்றார்கள். அதை நீங்களும் அறிந்தி ருக்கின்றீர்கள். ஏன் அவனுக்கு எதிராக நடவடிக்கையொன்றும் எடுக் காமல் இருக்கின்றீர்கள் என்று ஒரு விசுவாசியானவன் சபையின் மேய்ப் பரிடம் முறையீடு செய்தான். அதற்கு மேய்ப்பரானவர் அவனை நோக்கி: தம்பி, அவன் ஒழுங்கற்று நடக்கின்றான் என்று எனக்கு நன்றா கத் தெரியும். அவனுடைய நடை முறைகளைக் குறித்து அவனோடு அநேகந்தரம் தயவாய் பேசி, சபை யின் ஒழுங்கு முறைகளை கூறி, வேதம் கூறும் ஆலோசனைகளை யும் அவனுக்கு அறிவித்திருக்கி ன்றேன். சிலமுறை அவனை கடி ந்து கொண்டு, அவனுடைய நடை முறைளால் வரப்போகும் பின்விளைவுகளை அறிவித்திருக்கின்றேன். ஆனாலும், அவன் அதை கேட்க மனதில்லாதவனாக வாழ்ந்து வருகின் றான். மனிதர்களுக்கு தண்டனைகள் வழங்குவதற்கும், சிறையில் போடு வதற்கும் நாங்கள் நீதிபதியோ, பொலிசாரோ அல்ல. அவனை நாங்கள் இப்போது கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்து, அவனுக்காக ஜெபித்து வரு கின்றோம். ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு ஆண்டவராகிய இயேசு தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.; எனவே கொஞ்சம் பொறுமையாக சகித்துக் கொள். நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெண்டுண்டு அக்கினியிலே போடப்டபடும். அவனு டைய கனியற்ற வாழ்க்கையை நீ கண்டு, மாம்சத்தின் கிரியையாகிய கசப்பை உன் உள்ளத்திலே வைத்துக் கொள்ளாதே. ஒழுங்கை மீறி நடக்கின்றபடியால், நீயும் ஒழுங்கை மீறிவிடாதபடிக்கு எச்சரிக்கையா யிரு என்றார். பிரியமானவர்களே, ஒழுங்கு முறைகள் எத்தனையிருந்தா லும், ஒழுங்கற்று நடக்க மனதாயிருக்கின்றவர்கள், ஒழுங்குகளை அசட்டை செய்வார்கள். பரிசுத்தத்தை குறித்து மனதாயிருக்கின்றவர்கள், ஒழுங்கற்ற இடங்களிலும் கூட, பரிசுத்தமாக இருக்க நாடுவார்கள். கர்த்தரோடு இருந்த சீஷர்களில் சிலர தவறிப்போன நேரங்கள் உண்டு. அவர்க ளில் பிரதான சீஷனாகிய பேதுரு மனந்திம்பியது போல, மற்றவர்களும் மனந்திருப்ப வேண்டும் என்ற நல் எண்ணத்துடன் நாம் வாழவேண்டும். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிர யோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். பக்திவிருத்தியல்லாத புத்தியீனமான பேச்சுகளை விட்டுவிட்டு, ஜெபத்திலே தரித்திருப்போமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்ப டாமல், அவைகளைக் கடிந்துகொண்டு, உமக்கு பிரியமானது இன்ன தென்று சோதித்து பார்த்து, உம்முடைய வழியிலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - வெளி 22:11-12