புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 03, 2023)

சபையில் நல்லொழுக்கம்

1 கொரிந்தியர் 14:40

சகலமும் நல்லொழுக்க மாயும் கிரமமாயும் செய் யப்படக்கடவது.


சிறிய கிராமமொன்றிலே வாழ்ந்து வந்த ஜனங்கள், தங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு அக்கிராமத்திலே பாடசாலையேதும் இல்லாதிருந்த தால், கிராமத்தின் மூப்பர்கள் ஒன்றுகூடி அந்த கிராமத்திலே ஒரு சிறிய பாடசாலையை அமைத்துக் கொண்டார்கள். சிறியதான அந்த பாட சாலையிலே கல்விகற்று வந்த பிள் ளைகளின் பெற்றோர் ஒருவரையொ ருவர் அறிந்திருந்ததால், பாடசாலை மிகவும் நன்றாக இயங்கி வந்தது. ஆண்டுகள கடந்து சென்ற போது, இந்த செய்தியானது மற்ற ஊர்களு க்கும் வேகமாக பரவியதால், பல திசைகளிலுமிருந்து பலவிதமான மாணவர்கள் அந்த பாடசாலைக்கு கற்க வந்தார்கள். இதினிமித்தம் மாணவர்கள் எண்ணிக்கை மாத்திரம் அல்ல பிரச்சனைகளின் எண்ணி க்கையும் வளர ஆரம்பித்தது. அதனால், பாடசாலையானது சிறப்பாக இயங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, ஒழுக்க நெறிகளை பேணும்படியாக, சில ஒழுங்கு முறைகளையும் அறிமுகப்படுத்தினார் கள். காலம் கடந்து செல்லும் போது, உலக நாகரீகமும் மாறிக் கொண்டு போனதினாலே, எதிர்பாராத புதிதான பல பிரச் சனைகள் அங்கே அவ் வப்போது ஏற்பட்டது. அந்த வேளையிலே அதிகாரிகள் புதிய ஒழுங்கு முறைகளை அறிமுக ப்படுத்தினார்கள். அநேகமானோர், அந்த ஒழுங்கு முறைகளை ஆதரித்த போதும், ஒரு சிறு குழுவினர், அதிகாரிகளுக்கு எதிர்த்து நின்றார்கள். ஒழுங்கற்ற பிள்ளைகள் எங்கே படிக்கப் போவா ர்கள்? இத்தகைய ஒழுங்கு முறைகள் இருந்தால், அவர்கள் இங்கே வரமாட்டார்கள் என்று முறுமுறுத்தார்கள். அந்த பாடசாலையின் அதிபர் அவர்களை நோக்கி: கல்வி கற்பதற்காக எந்த பிள்ளையும் இங்கே வருவதற்கு தடையில்லை. ஆனால், பாடசாலையில் இணைந்த பின்பு, மற்றய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குழப்பம் ஏற்படுத்தாமல், அவர்கள் இங்கே படிக்க வேண்டும் என்று திட்டமாக பதிலளித்தார். ஒழுங்காக இயங்கிவரும் குடும்பத்தில் ஒழுங்குமுறைகள் சீராக இருக் கும். சிறப்பாக இயங்கும் எந்த அமைப்பிலும் ஒழுங்கு முறைகள் இரு க்கும். மேலும் ஒருவன் மல்லயுத்தம் பண்ணினாலும், அவன் சட்டத்தின் படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். அது போலவே, சபைக்கு வருவ தற்கு எவருக்கும் தடையில்லை, ஆனால் சபையில்;, சகல காரியங்களை யும் ஒழுங் காக நடத்தப்படுவதற்கு ஒழுங்குமுறைகள் அவசியமானது. எனவே, நீங்கள் ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ அவைகளையே சிந்தி த்துக் கொண்டிருங்கள். ஒழுங்கு முறைகளுக்கு எதிர்த்து நிற்காமல், ஒழுங்கில்லாத வர்களுக்குப் தயவாய் புத்திசொல்லுங்கள்.

ஜெபம்:

யாவற்றையும் ஒழுங்காகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கும் தேவனே, நான் ஒழுங்கு முறைகளுக்கு எதிர்த்து நிற்காமல், ஒழுக்க முள்ளவைகளையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8