புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 02, 2023)

மிகையான கட்டுப்பாடுகள்

சங்கீதம் 119:1

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்


ஒரு ஊரிலே வாழ்ந்த மனிதனானவன், அவனது ஊரிலே அதிகாரிகளால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் மிகவும் கடினமானதெனவும், இங்கே மனிதர்கள் சந்தோஷமாகவும், உல்லாசமாகவும் வாழ முடியாது. ஏனெ னில் இங்கு பலவிதமான கட்டுப்பாடு களை வைத்திருக்கின்றார்கள். இவை யாவும் ஒரு தனி மனிதனுடைய சுதந்திரம் என்று கூறி தன் சிறுபிள்ளைகளோடு, தூரத்திலுள்ள பட்டணமொன்றிற்கு சென்று அங்கே மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். காலங்கள் கடந்து சென்ற பின்னர், தன் மகனானவன், போதைவஸ்துக்கு அடிமையாகி, தகாத இடங்களுக்கு சென்று தன் வாழ்வை இளவயதிலேயே மாய்த்துக் கொண்டான். மனவேதனையை தாங்க முடியாத தாயானவள், ஏன் இந்த பட்டணத்திலே அழிவுக்குரிய காரியங்களை அனுமதிக்கின்றார்கள். இதனால் அழிவு வரும் என்று அறிந்தும், பட்டணத்தின் அதிகாரிகள் ஏன் அதற்கு எதிராக கடும் சட்டங்களை போட்டு தடுத்து நிறுத்தவில்லை என்று மனம் கசந்து அழுதாள். பிரியமானவர்களே, மனிதர்கள் இன்று சுதந்திரத்தை நாடிச் செல்கின்றார்கள். ஆனால், அந்த சுதந்திரத்தினால் உண்டாகும் விளைவுகளின் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். தேவனாகிய கர்த்தர் ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் தம் ஜனங்கள் முன்பாக வைத்து, அதை தெரிந்து கொள்ளும் சுதந்தரத்தையும் தம் ஜனங்களுக்கு கொடுத்தார். ஆசீர்வாதத்;தின் வழியிலே வாழ்வதற்குரிய வாழ்வின் பிரமாணங்களை தம்முடைய ஜீவ வார்த்தை வழியாக கொடுத்திருக்கின்றார். அந்த ஆசீர்வாதத்தின் வார்த்தைகள் இன்று சில விசுவாசிகளுக்கு பரமாகவும், அடிமைத்தனமாக தோன்றுவதால், அதை தள்ளிவிட்டு, சுதந்திரத்தை தேடி வேறு இடங்களுக்கு செல்கின்றார்கள். தங்கள் வாழ்விலே அழிவுகளை சந்திக்கும் போது, தேவன் ஏன் இப்படி எங்களுக்கு செய்தார்? தேவன் அன்புள்ளவரானால், ஏன் இதைத் தடுத்து நிறுத்தவில்லை? என்று தேவனுக்கு விரோதமாக குரல் எழுப்புகின்றார்கள். தேவன் அன்புள்ளவரானதினாலே, தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காக ஒப்புக் கொடுத்தார். திருக்குமாரானாகிய இயேசு வழியாக நிறைவான வாழ்வின் ஒரே வழியை கற்றுந் தந்திரு க்கின்றார். எனவே நாம் உணர்வற்ற, பொறுப்பற்ற, எப்போதும் முறு முறுக்கின்ற பிள்ளைகளாக வாழாமல், உன்னதமான அழைப்பை உணர் ந்து, பெற்ற சுயாதீனத்தை தகாதவிதமாய் அனுபவிக்காமல், பொறுப்பு ள்ள தேவ பிள்ளைகளாக பொறுமையோடு தேவனுடைய வார்த்தை யின் வழியிலே வாழ்வோமாக.

ஜெபம்:

நன்மையை நிறைவாய் பெறும்படி என்னை அழைத்த தேவனே, நான் உம்மிடத்தில் பெற்றுக் கொண்ட சுயாதீனத்தை தகாதவிதமாய் அனுபவிக்கால், உம்முடைய வார்த்தையின்படி வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசே 20:11-13