புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 01, 2023)

அசையாத நிலையான வாழ்க்கை

லூக்கா 6:48

பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க க்கூடாமற்போயிற்று;


நடு இராத்திரியிலே, பெரும் மழையோடு புயல்காற்று கோரமாக வீசிக் கொண்டிருந்தது. பெரு வெள்ளம் ஏற்பட்டதால், ஊரிலுள்ள ஜனங்கள் யாவரும் ஒதுங்குவதற்கு பாதுகாப்பான இடத்தை தேடினார்கள். அந்த ஊரிலே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மாளிகையொன்று அந் தப் பெருங்காற்றின் மத்தியிலும் அசையாமல் உறுதியாக இருந்ததால், ஜனங்கள் யாவரும் அங்கே தஞ்சம் புகுந்தார்கள். அந்த மாளிகையா னது, ஆழமாக தோண்டி மிக பெல மான அஸ்திபாரத்தின்மேல் உறுதி யாக கட்டப்பட்டிருந்தது. அந்த வீடு அசையாமல் நிலையாக இருந்த தால், ஆபத்துக் காலத்திலும் பலரு க்கு தஞ்சமாக இருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, கோணலும், மாறுபாடான உலகத்திலே வாழும் நம்முடைய வாழ்க்கையானது எங்கே கட்டப்பட்டிருக்கின்றது என்று ஆரா ய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். இந்தப் பூமியிலே வாழும்வரை நம் வாழ்க்கையானது, குடும்பம், உறவு, நண்பர்கள், சபை, வேலை, பாடசா லை, வெளி இடங்கள், அதிகாரங்கள் என்ற வட்டத்திற்குள் அமை க்கப் பட்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் நாம் சன்மார்க்கர், துன்மார்க்கர், தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்ற மனிதர்களையும்; சந்தி க்கின்றோம். போராட்டங்கள் நிறைந்த மனித வாழ்விலே, துன்பங்கள், பிரச்சனைகள் எப்பக்கத்திலுமிருந்து நம்மை நோக்கி வரலாம். அவை கள் பெரு மழையைப் போலவும், பெருங் காற்றறைப்போலவும் நம் வாழ்வை நோக்கி வருகின்றதாயிருக்கின்றது. வெள்ளங்கள் புரண்டோடி வாழ்வின் அஸ்திபாரங்களிலே மோதலாம். அந்த வேளையிலே பலர் கலங்கி, திகைத்து, நிலை தவறிப் போய்விடுகின்றார்கள். ஆனால், ஆண் டவராகி இயேசுவினிடத்தில் வந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் ஆழமாய்த் தோண்டி, கற்பாறை யின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்;. பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின் மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று. ஏனென்றால் அது வார்த்தையானவராகிய கிறிஸ்து இயேசுவாகிய கன்மலையின்மேல் அஸ் திபாரம் போடப்பட்டிருந்தது. உங்கள் வாழ்க்கை எங்கே கட்டப்பட்டிரு க்கின்றது? மனிதகுலத்தின் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த் தையின்படி வாழ்கின்றவன், ஆபத்தைக் கண்டு அஞ்சமாட்டான். அவன், மற்றவர்களுக்கும் வழிகாட்டியாகவும், தஞ்சமாகவும் இருக்கின்றான்.

ஜெபம்:

அசைவில்லாத நிலையான வாழ்க்கை வாழ என்னை வேறுபிரித்த தேவனே, உம் வார்தையினால் உண்டாகும் நிறைவான வாழ்க்கையை நான் உணர்ந்து கொள்ளும்படி பிரசாமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 23:4