புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 30, 2023)

தேசத்தின் ஷேமம்

1 பேதுரு 3:12

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவரு டைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது;


தேசத்திலே தேவனை அறியாதவர்கள் பெலத்திருக்கின்றார்கள். இந்த தேசத்தின் முடிவு என்ன ஆகுமோ என்று ஒரு விசுவாசியானவன் தான் வாழும் தேசத்தைக் குறித்து துக்கமடைந்திருந்தான். ஒரு நாள் அவன் கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே வாழும், அனுபமிக்க, முதிய ரொருவரை சந்தித்துப் பேசினான். அவர் அந்த விசுவாசியானவனை நோக்கி: மகனே, நான் சொல்வதை நன்றாக கேளு. ஆபிரகாம் என்ற மனித னுடைய நாட்களிலே, சோதோம் கொ மோரா என்ற பட்டணங்கள், கர்த்தரு டைய தோட்டத்தைப் போலவும் எகிப் துதேசத்தைப்போலவும் இருந்தது. ஆனால், ஜனங்களோ, பொல்லாதவர் களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவி களுமாய் இருந்தார்கள். இன்று இந்த உலகிலே நவீனமடைந்திருக்கும் பாவ ங்கள் சோதோமியரின் (Sodomite) பாவங்களாக இருக்கின்றது. கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப் பதினாலும் அதை முற்றாக அழித்துப் போட சித்தங் கொண்டார். அப் போது, தேவனுடைய மனுஷனாகிய ஆபிராகம் கர்த்தரை நோக்கி: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? அப்போது கர்த்தர் ஐம்பது அல்ல, சோதோமிலே பத்து நீதிமான்கள் இருந்தாலும், அவர்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். கர்த்தர்தாமே, தான் செய்யப் போவதை தன் தாசனாகிய ஆபி ரகாமிற்கு வெளிப்படுத்தினார். தேசத்திலே பெலத்திருக்கும் பொல்லா தவர்களை பாராமல், நீதிமானகிய நீ கர்த்தரை நோக்கி விண்ணம் செய். கர்த்தர் தம்முடைய நீதிமான்களின் வேண்டுதல்களை கேட்கின்றவரா யிருக்கின்றார் என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, தம்மு டைய தாசர்களின் ஜெபத்தை கேட்கின்ற நம்முடைய தேவன் சர்வ வல் லமையுள்ளவர். அவர் சமுகத்திலே உங்களை தாழ்த்தி, அவரை நோக்கி தேசத்திற்காக வேண்டுதல் செய்யுங்கள். நாம் ஆராதிக்கும் தேவன், ராஜ்யங்களை மாற்றி, ராஜாக்களை தள்ளிப் போடுகின்றவர். அவர் தம்முடையவர் களை அறிவார். எனவே, பொல்லாப்பை கண்டு பயப் படாமல், தேசத்தின் சேமத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, நான் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந் தரிக்காமலும், உலகத்தினால் உண்டாயிருக்கும் சுயாதீனத்தினால், நான் தவறான தீர்மானங்களை எடுக்காதபடிக்கும் என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 நாளாகமம் 7:14