புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 29, 2023)

யாருடைய சாட்சியை நாடுகின்றீர்கள்?

சங்கீதம் 139:7

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம் முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?


இன்று வீட்டிற்கு விருந்தாளிகள் வருகின்றார்கள், நாங்கள் யாவரும் வீட்டை உள்ளும் புறமும் நன்றாக சுத்தப்படுத்தி பார்வைக்கு நேர்த்தி யாக வைத்திருக்க வேண்டும் என்று ஒரு தாயானவள் தன் குடும்பத்தார் யாவருக்கும் கூறினாள். அதன்படிக்கு, குடும்பத்தார் யாவரும் வீட்டின் அறைகள், வெளிமுற்றம், பின்புறம் யாவற்றையும், சுத்தப் படுத்தி ஒழுங்கு படுத்தினார்கள். மாலையிலே வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் வீட் டைப் பார்த்துவிட்டு, இப்படித் தான் எங்கள் வீட்டையும் நாங்கள் வைத் திருக்க வேண்டும் என்று தங் கள் பிள்ளைகளுக்கு அந்த வீட்டை முன் உதாரணமாக காட்டினார்கள். விரு ந்தாளிகள் வந்து சென்ற பின்பு, அடுத்த நாளே, வீடானது முன்பு இருந்தது போலவே, ஒழுங்கற்ற நிலைமைக்கு திரும்பிற்று. பிரியமான சகோதர சகோதரிகளே, விருந்தாளிகளுக்கு நம்முடைய வீட்டை சுத் தமாக காண்பிப்பது நல்லது. அதாவது, நம்முடைய இருதயமாகிய வீடு, நம்முடைய வாழ்க்கை நடை முறைகள், நம்முடைய பேச்சுக்கள் யாவும் அவர்கள் முன்னிலையில் நேர்த்தியாக இருப்பது நல்லது. ஆனால், அது அவர்களுக்காக மாத்திரம் நேர்;த்தியாக இருப்பது நல்லதல்ல. சில மனிதர்கள், சக விசுவாசிகள் முன்னிலையில், சபை மேய்ப்பர்கள், மூப் பர்கள் முன்னிலையில் தம் வாழ்க்கையை சாட்சியுள்ள வாழ்க்கை என்று காண்பித்து கொள்கின்றார்கள். அதனால், அவர்கள் பெரும் திருப்திய டைகின்றார்கள். அதிலே சொற்ப காலத்திற்கு ஒரளவு வெற்றியை கண்டு கொள்கின்றார்கள். காரியங்கள் வெளிப்படும் போது, இருக் கின்ற இடத்தைவிட்டு இன்னுமொரு இடத்திற்கு சென்று விடுகின்றா ர்கள். தங்கள் ஆவிக்குரிய வாழ்வின் உண்மை நிலைமை மேய்ப்பர் அறியாதபடிக்கு, தங்கள் வாழ்வில் எல்லாம் ஒழுங்காகவும், கிரமமாக வும் நடைபெறுகின்றது என்று காண்பித்துக் கொள்கின்றார்கள். ஆனால், நம்முடைய வாழ்வின் உண்மை நிலைமையை, பிரதான மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கு யாரால் மறைத்து வைக்கக்கூடும்? நம்முடைய வாழ்வின் இலக்கு என்ன? மனிதர்களின் அங்கீகாரத்தை மட்டும் நாம் பெற்றுக் கொள்வது போதுமானதா? தேவனாலேமாத்திரம் வருகிற மகி மையை தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளு கிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? என்று ஆண்டவராகிய இயேசு தன்னை பின்பற்றி வந்தவர்களிடம் கேட்டார். உத்தமமானவர்கள்; என்று தேவனாலே வரும் சாட்சியை பெறும்படிக்கு உண்மையுள்ளவர்களாக எப்போதும் நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, என்னை ஆராய்ந்து, என் இருத யத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். உண்மையுள்ள வாழ்க்கை வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 5:37