தியானம் (புரட்டாசி 28, 2023)
உன் எதிரியின் விழுகையின் போது...
நீதிமொழிகள் 24:17
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவனொருவனுக்கு, அவனுடைய அயலிலுள்ள மனிதனானனொருவன், எதிராக பெரும் பாதகத்தை செய்துவிட்டான். அதனால், அந்த விசுவாசியானவனின் குடும்பமானது சொல்லமுடியாத வேதனைக்கூடாக கடந்து சென்றது. அந்த விசுவாசியா னவன், தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்றவனாக இரு ந்ததால், தன் மனதின் பாரங்களை எல் லாம் கர்த்தருடைய சமுகத்திலே ஜெப த்தினாலும், வேண்டுதலினாலும் தெரி யப்படுதி வந்தான். அநேக ஆண்டுக ளுக்கு பின்பு, அவனுக்கு எதிரியாக பொல்லாப்பு செய்த மனிதனானவன், தீடிரென பெரிதான விபத்தொன்றிலே மரித்துப் போனான். அந்த செய்தியை கேள்விப்பட்ட விசுவாசியானவனின் மன தில் சந்தோஷமோ, திருப்தியோ ஏற்ப டவில்லை. மாறாக, அந்த மனிதனுடைய குடும்பத்தை குறித்த மனப் பாரம் அவனுக்கு ஏற்பட்டது. அந்த குடும்பத்தின் ஆறுதலுக்காகவும், விடுதகை;காகவும் அவன் கர்த்தரை வேண்டிக் கொண்டான். எதிரிகள் விழும்போது, 'அரசன் அன்றறுப்பான், ஆண்டவன் நின்றறுப்பான் என்று சில உலக மனிதர்கள் தங்கள் எதிரிகளின் விழுகையிலே திருப்திய டைகின்றார்கள். இவர்கள் பகைiயும், வன்மத்தையும்;, கசப்புபையும் தங்கள் மனதிலே வைத்திருப்பதால், தீமைக்கு தீமை செய்யப்பட வேண் டும் என்று பலஆண்டுகளாகவே காத்திருக்கின்றார்கள். 'உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே. அவன் இடறும் போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வை க்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனி டத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். பொல்லாதவர்களை க்குறித்து எரிச்ச லாகாதே. துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.' என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம். ஆண்டவராகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தினாலே பாவமறக் கழுவப்பட்டு நீதிமான்களாக்கப்பட்டவர் களே, பொல்லாப் பிலே களிகூறும் இருதயம் உங்களுக்கு வேண்டாம்.உங் கள் எஜமானனாகிய இயேசு கூறியிருப்பதைக் கேளுங்கள். ஆண்டவர் இயேசு சொன்னார்: 'உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.'
ஜெபம்:
நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமல் இருக்கின்ற தேவனே, உம்முடைய திருவசனத்தை கேட்டு அதன்படி செய்வதற்கு எனக்கு மனத்தாழ்மையை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 12:19-21