புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 27, 2023)

அநேகரால் புறக்கணிக்கப்படுகின்றேன்

1 யோவான் 2:17

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இரண்டு மனிதர்கள் ஆலயத்திற்கு சென்று ஆராதித்து வருவது வழக்கமாகயிருந்து. அவர்களில்; ஒருவன், உத்தம னும், தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடப்பதால், உண்மையை பேசுகின்றவனாக இருந்தான். அவன் தீய பழக்கங்கள் எதுவும் இல்லாத சன்மார்க்கனும், நன்மை செய்கின்றவனுமாக இருந்தான். ஆனாலும், உலகத்தின் போக்கில் வாழும் ஊரா ரில் அநேகமானோர் அவனைப் பகைத்தார்கள். மற்றய மனிதனா வன், பொய் பேசாதவனாக இருந்த போதிலும், உண்மையை மறைக்கி ன்றவனாக இருந்தான். சில தேவ காரியங்களிலே சமரசம் செய்கின்ற வனாகவும் அவன் வாழ்ந்து வந் தான். அதானல், உலகத்தின் போக் கில் வாழும் ஊராரில் அநேகமான னோர் அவனை ஏற்றுக் கொண்டார்கள். இன்றைய உலகிலே இப்படி ப்பட்ட இரண்டு விதமான மனிதர்களை நாம் சபைகளிலே கூட காணா லாம். 'உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிற தற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத் தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராத படியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரி ந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.' என்று ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கூறியிருக்கின்றார். எனவே இந்த உகல போக்கிலே வாழும் மனிதர்கள் உங்களை சிநேகிக் கும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையை நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். சத்தியமானது அறிவிக்கப்பட்ட பின்னரும், உலகத்தின் போக்கிலே வாழும் மனிதர்கள் உங்கள் வீட்டிற்கு போக்கும் வரத்துமாக இருந்தால், அல்லது உங்களோடு உறவு பாராட்டும் போது, உங்களோடு அதிக நேரத்தை செலவிடும் போது, உங்கள் வீட்டிலே பேசப்படும் காரியங்களை நன்றாக ஆராய்ந்து பாருங்கள். உலக போக்கு எங்கே இருக்கின்றதோ, அங்கே உலக போக்கில் வாழ்கின்றவர்களின் இருதய மும் இருக்கும். உங்கள் வாழ்வின் தீர்மானங்கள் உங்களுடையது. ஆனால், தேவனுடைய வார்த்தைகள் மாறாதாயிருக்கின்றது. உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகை யால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். பிரியமானவர்களே, இந்த முழு உலகமும் உங்க ளைப் பகைத்தாலும், நீங்கள் தேவனுக்கு பிரியமுள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலகத்திற்கு பிரியமுள்ளவனாக வாழும்படிக்கு, நீர் தந்த பரிசுத்த வாழ்வை சமரசம் செய்யாதபடிக்கு, எப்போதும் உம்மை பிரியப்படுத்துகின்றவனாக வாழ நீர் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:24