புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 26, 2023)

வாசல்களை காத்துக் கொள்ளுங்கள்

சங்கீதம் 147:13

அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.


ஒரு எளிமையான வீட்டிலே, வீட்டிற்கு முன்புறமும், பிற்புறமுமாக இர ண்டு கதவுகள் இருந்தது. காற்றோட்டத்திற்கும், வெளிச்சத்திற்கென் றும் இரண்டு ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருந்தது. இரவிலே குடும்பத்தார் சமாதானமாய் உறங்கும் படிக்கும், கள்வர்கள் உள்ளிடாதபடிக் கும் கதவு களையும் ஜன்னங்க ளையும் பூட்டி, கதவின் தாழ்ப்பாள்களை போட்டு விடுவார்கள். குளிர் நாட்களிலும், மழை காலத்திலும் அந்த கதவுகள், ஜன்ன ல்கள் வழியாக தண்ணீர் உள்ளே வராதபடிக்கு அவைகள் நேர்த்தியா கப் பூட்டப்பட்டிருக்கும். அந்த வீடு சிறிதாக இருந்ததால், கதவுகளும், ஜன் னல்களும் திறக்கப்பட்டிருக்கின்றதா அல்லது பூட்டப்பட்டிருக்கின்றதா என் பதை யாவருமே இலகுவாகவே கண்டு கொள்வார்கள். அந்த வீட்டின் எதிர்பக்கத்திலே, ஒரு பெரிய இடாம்பீ கரமான மாளிகையிருந்தது. அந்த மாளிகைக்கு செல்வதற்கு பல கதவு களும், ஜன்னல்களும்; ஒவ்வொரு தட்டிலும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தெருவை கடந்து செல்லும் ஊர் மக்கள் யாவரும், எளிமையான வீட்டையல்ல அந்த மாளிகையையே பார்த்த படி செல்வார்கள். அவர் கள் மட்டுமல்ல கள்வர்களுடைய கண்களும்கூட அந்த மாளிகையின் மேலேயே இரவும் பகலும் நோக்கமாக இருந்தது. எனவே அந்த மாளி கையின் ஜன்னல்;கள், கதவுகள் ஒவ்வொன்றும் கவனமாக பராமரிக்க ப்பட வேண்டும். நாம் இந்த பூமியிலே வாழும்வரை, நாம் வாழும் உல கத்தைவிட்டு முற்றாக பிரிந்து வாழ முடியாது. அதே வேளையிலே இந்த உலகத்தின் வேஷத்தை நாம் தரிக்காதடிக்கு மிகவும் எச்சரிக்கையுள்ள வர்களாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் தன் இருத யமாகிய வீட்டை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும். இன்று சிலர், தங்கள் இருதயமாகிய வீட்டில், பல கதவுகளையும், ஜன் னல்;களையும் அமைத்துக் கொள்கின்றார்கள். ஆசீர்வாதங்கள் என்ற போர் வையின் கீழே, அநேக உலக காரியங்கள் தங்கள் வாழ்க்கையிலே உள் ளிடுவதிற்கு இருதயத்தின் வாசல்களை திறந்து வடுகின்றார்கள். அவை கள் மனிதர்களின்; இருதயத்தின் ஆசைகள். பிரியமானவர்களே, கர்த் தருடைய வார்த்தையினால் உங்கள் இருதயத்தின் வாசல் பலப்படுத்த ப்படுவதாக. குதிரையின் பலத்தினாலும், காவல் வீரனுடைய கால்களி னாலும் வீடு காக்கப்படுமோ? கர்த்தர் உங்கள் இருதயத்தைக் காக்கா விட்டால், எந்தக் காவலும் இந்த உலகத்தின் போக்கிற்கு நிலைநிற்கப் போவதில்லை.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ என்னை வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்தின் காரியங்களுக்கு என் இருதயத்தை திறந்துவிடாமல்இ உம்முடைய ஆலோசனைகளின் வழியில் இருதயத்தை காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 4:23