தியானம் (புரட்டாசி 25, 2023)
உகலபோக்கோடுள்ள பாலங்கள்
1 தீமோத்தேயு 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஜனங்கள் தங்கள் முன்னோர்களின் ஆலேசானைகளின்படி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தா ர்கள். அந்த ஊரிலிருந்து பட்டணத்திற்கு செல்வதற்கு பெரிய நதியொ ன்றை கடக்க வேண்டியிருந்ததால், அந்த ஊருக்கும் பட்டணத்திற்கும் இடையே ஒரு சிறிய பாளம் அமைக்கப்பட்டிருந்தது. ஜனங்கள், தேவை ஏற்படும் போது, பாலத்தை கடந்து, பட்டணத்திற்கு சென்று தங்கள் பிழை ப்பிற்காக, தங்கள் விளைச்சல்களின் பலன்களையும், தாங்கள் செய்யும் தள பாடங்களையும் சந்தையில் விற்று விட்டு, வாழ்க்கைக்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு மறுபடியும் திரும்பிவி டுவார்கள். காலங்கள் கடந்து சென்றதும், புதிய தலைமுறையை சேர்ந்த வர்களில் சிலர், ஊருக்கும் பட்டணத்திற்கும் இடையே ஒரு சிறிய பால ம்தான் இருக்கின்றது. நாங்கள் பல மையில் தூரம் அந்த பாலத்திற்கு பயணம் செல்ல வேண்டும். எனவே புதிய பாளங்களை அமைப்போம். அதனால் நன்மைகள் பல உண்டு. பட்டணத்தின் முகவ ர்களின் பெரிய வாகனங்கள் வியாபராத்திற்காக இங்கே வர முடியும். அதனால், பொரு ட்களை கொள்வனவு செய்ய நாங்கள் அங்கே போகத் தேவையில்லை என்று கூறினார்கள். அவர்களின் ஆலோசனை கேட்ப தற்கு நன்றாக இருந்தது. ஆனால், அங்கிருந்த மூப்பர்களில் சிலர், ஜன ங்களே, நீங் கள் செய்யப் போவதையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். இதுவரை க்கும் நாம்; போதுமென்கின்ற மனதோடு வாழ்ந்து வந்தோம். இப் போதும் இருக்கும் ஒரு பாலத்தை நாங்கள் கவனமாக பராமரித்து, காவல் காத்து வருகின்றோம். பட்டணத்திற்கு பல பாலங்களை நாம் அமைப்பதால், நன்மைகள் உண்டு, ஆனால் அத்தோடு பெரிதான தீமை களும் அதன் வழியாய் உட்புகுந்து விடும் எனவே செய்யப்போவ தையிட்டு எச்சரிக்ககையுள்ளவர்களாக இருங்கள் என்று கூறினார்கள். பிரியமானவர்களே, நாம் இந்த கோணலும் மாறுபாடுமான உலகிலே வாழ்கின்றோம். இன்று கல்வி, வேலை, நண்ப ர்கள், உறவுகள், அந்நியநுகம், களியாட்டம், உல்லாசப் பயணங்கள் என்று சில விசுவா சிகளும் கூட, தங்கள் வாழ்க்கையிலே உலகத்தோடு பல பாலங்களை அமைத்துக் கொள்கின்றார்கள். இந்த உலகத்தோடு பாளங் களை அமைக்க உங்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால், அவைகள் யாவும் ஆரம்பத்திலே நன்மையாகத் தோன்றும், அதே பாலங்களின் வழியாக தீமைகள் உட்புகுந்துவிடாதபடிககு எச்சரிக்கையுள்ளவர்களா கயிரு ங்கள். தேவனனே நன்மைகளை சம்பூரணமாய் கொடுக்கிறவர்.
ஜெபம்:
என் நாட்களை அறிந்த தேவனே, மனிதனுக்கு செம்மையாக தோன்றும் வழியிலே நான் வசதியை தேடி ஓடாமல், உம்முடைய வார்த்தையின்படி என் வாழ்வை காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 2:15-17