தியானம் (புரட்டாசி 23, 2023)
சுபாவங்கள் மாற வேண்டும்
பிலிப்பியர் 2:5
கிறிஸ்து இயேசுவிலிரு ந்த சிந்தையே உங்களி லும் இருக்கக்கடவது;
சுகாதரத் துறையில் படித்து பட்டம் வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒரு மாணவனானவன், நாட்டின் பிரபல்யமான சுகாதாரத் துறை கூட் டமைபில் (Health Association) பதிவு செய்து கொண்டான். அந்தத் துறையில் தேர்ச்சி பெறுவதற்கு ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து நிலை களை (Levels), குறிப்பிட்ட காலத்திற்குள் படித்து முடிக்க வேண்டிய தாயிருந்தது. படிப்பை முடித்து, பரீட் சைகள் யாவற்றிலும் தேர்ச்சி பெற்ற பின்னர், சுகாதார நிபுணர் என்று பட் டம் பெறுவதற்கு, இரண்டு வருட ; கள் அந்தத் துறையியின் வேலை அனு பவம் முன் நிபந்தனையாக இருந்தது. அந்த வேலை அனுபவத்தை பெற்ற பின்னர் அவன் சுகாதார நிபுணர் என்ற நிலையை அடைந்து கொண் டான். அதைத் தொடர்ந்து பிரபல்யமான சுகாதர அமைப்பு ஒன்றிலே, நல்ல சம்பளத்துடன் வேலையையும் பெற்றுக் கொண்டான். வேலை யிலே சுகாதரத்தைக் குறித்த பயிற்சி நெறிகள் யாவையும், ஒழுங்காக, சிறந்த முறையில் நடப்பித்து வந்தான். வேலை முடிந்தது, வீடு திரும் பியதும், தன் வாழ்க்கையிலே அவனோ தான் செயற்படுத்தி வரும் பயிற்சி நெறிகளை ஒருபோதுமே கைக் கொள்வதில்லை. இன்று தேவ ஊழியத்தை நடப்பிப்தற்காக, இப்படியாக தகுந்த முறைப்படி, ஒழுக்க நெறியோடு வேதாகமக் கல்லூரிக்கு சென்று படித்து பட்டம் பெறுகின்றார்கள். சிலர், தொடர்ந்து இறையியலில் மேற்படிப்புக்களை முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக் கொள்கின்றார்கள். இவைகளினாலே நன்மைகள் உண்டு. ஆனால், படித்து பட்டம் பெறுவதால் மட்டும் நாம் ஆண்டவர் இயேசுவின் சாயலிலே வளர முடியாது. பொதுவாக படிப் பும் பட்டமும் மனிதர்களுடைய வாழ்விலே அவர்களை அறியாமலே ஒரு பெருமையை அவர்களுக்குள் உண்டாக்கி விடுகின்றது. ஆனால், நம்முடைய ஆண்டவராகிய இயேசுவோ, தேவனுடைய ரூபமாயிரு ந்தும், தேவனு க்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடு த்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். பிரியமானவர்களே, நாம் எந்த நிலையிலே இருந்தாலும், எவ்வளவு கற்றவர்களாக இருந்தாலும், உயர்விலும் தாழ் விலும் திவ்விய சுபாவங்களிலே வளர வேண்டும். நம் வாழ்வின் இறுதிவரை கிறிஸ்துவில் இருந்து சிந்தை எப்போதும் நம்மில் இருக்க வேண்டும். மனத்தாழ்மையோடு ஊழியம் செய்வோமாக.
ஜெபம்:
உம்முடைய குமாரனாகிய இயேசுவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு என்னை முன்குறித்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் பெருமை எனக்குள் குடிகொள்ளாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 12:1-2