புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 22, 2023)

நம் வாழ்வின் நோக்கம் என்ன?

யோவான் 6:38

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்


வியாபார ஸ்தானங்களிலே அமைப்புக்களும், ஒழுங்கு முறைகளும் ஏற்படுத்துகின்றார்கள். ஏன்? அந்த ஸ்தாபனத்தின் உரிமையாளர்களின் வியாபார நோக்கங்களை நிறைவேற்றி முடிப்பதற்காகவே, அமைப்பு க்களும், ஒழுங்கு முறைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அதை தவ றாக புரிந்து கொண்ட அதன் வேலையாட்கள், அந்த அமைப்புக்க ளாலும், ஒழுங்கு முறைகளாலும் உண்டான அதிகாரத்தையும் சுதந் திரத்தையும் துஷ;பிரயோகம் செய்து சக வேலையாட்களின் மத்தியிலே மனகுழப்பங்களை ஏற்படுத்துகின் றார்கள். இவ்வண்ணமாகவே, தேவ ஊழியத்தை நிறைவேற்றி முடிக்கும் படிக்கு சபையிலே அமைப்புக்க ளும், ஒழுங்கு முறைகளும் ஏற்படு த்தப்பட்டுள்ளது. பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதே நம்முடைய வாழ்வின் கருப்பொருள் என்பதை விசுவாசிகள் அறிந்து கொள்ள வேண்டும். சில வேளைகளிலே, பதவி, பொறுப்புக ளில் இருப்பவர்கள் தாங்கள் விசுவாசிகள் அல்ல என்று எண்ணிக் கொள் கின்றார்கள். தேவனாலே வேறுபிரிக்கப்பட்டு, ஆண்டவர் இயேசுவை தங் கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட யாவரும் விசுவாசிகளா கவே இருக்கின்றார்கள். நிர்வாக அமைப்புக்கள், ஒழுங்கு முறைகள் யாவும் சிறப்பாக இருக்கின்ற இடத்திலே, பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்றப்பட்டால், அந்த அமைப்புக்களாலும், ஒழுங்கு முறை களாலும் பிரயோஜனம் உண்டு. ஆனால், தங்கள் அழைப்பை மறந்து போன விவாசிகள், பிதாவின் சித்தத்தை தங்கள் சொந்த வாழ்வில் நிறை வேற்றாமல், அமைப்புக்களையும், ஒழுங்குகளையும் சீராக வைத்திருப் பதால், அதனால் பலன் ஒன்றும் இல்லை. நம் வாழ்வில் ஏற்படும் எந்த சூழ்நிலைகள் மத்தியிலும், அதாவது அவை சதகமாக இருக்க லாம், அல்லது பாதகமாக இருக்கலாம். அவை யாவற்றின் மத்தியிலும், பிதா வாகிய தேவனின் திருச்சித்தம் நம் வாழ்வில் நிறைவேற நாம் இடங் கொடுக்க வேண்டும். இந்த வளர்ச்சியானது நம்மில் நாளுக்கு நாள் பெருக வேண்டும். ஆண்டவராகிய இயேசு தாமே, தம்முடைய பிதாவா கிய தேவனுடைய சித்தத்தை செய்யும்படி இந்த உலகத்திற்கு வந்தார். உலகமோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், அவரோ, சிலு வையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ் த்தினார். எனவே, நாமும் நம்மை தாழ்த்தி, தேவ சித்தம் நம்மில் நிறை வேற ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, என் வாழ்விலே ஏற்படும் எந்த சூழ்நிலையிலும், என் அழைப்பின் நோக்கத்தை நான் மறந்து போகாமல், உம்முடைய திருச் சித்தத்தை நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 2:12-13