புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 21, 2023)

பதவி உயர்வுகள்

2 பேதுரு 1:10

ஆகையால், சகோதரரே, உங் கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்;


ஒரு ஊரிலுள்ள சனசமூக நிலையத்தில், பல ஆண்டுகாலமாக தலைவராக இருந்து வந்த அந்த ஊரின்; மூப்பரானவர், தனது வயதும், உடல் ஆரோக்கியத்தின் காரணமாகவும , ஒரு தலைவர் செய்ய வேண்டிய செயற்பாடுகளை தகுந்த முறையில் நடாத்த ஏற்றதாகயில்லை என்பதை அறிந்து கொண்டார். இதனால், சில நன்மையான செயற்திட்டங்கள் ஸ்தம்பிதமானது. வேறு சில திட்டங்களின் பலன் குறைவுபட தொடங் கியது. அந்த சனசமூக நிலைத்தை ஆரம்பிப்பதற்கு, அவரும் ஒரு கார ணகர்த்தாவாக இருந்த போதும், தன்னுடைய நேரம் கடந்து விட்டது என்று அறிந்த போது, தன் பதவியிலிரு ந்து அவர் ஒய்வுபெற்றுக் கொண்டார். அவருடைய இடத்திற்கு யாரை நியமிப்பது என்ற பேச் சுவார்த்தைகள் ஆரம்பித்தது. சில கூட்டங்களில் பட்டிமன்றத்தைப் போல விவாதங்களை எழும்பிற்று. சில சமயங்களிலே அந்த விவாதங்கள் வாக்குவாதங்களாவும் மாறிவிட்டது. ஊரிலே, ஜனங்கள் மத்தி யிலே பலனளிக்கும் நற்செயல்கள் நடைபெறவேண்டும் என்பதை எண் ணாமல், யார் அந்த ஆசனத்திலே இருப்பது? யார் தலைவர்? என்பதே முதன்மையான நோக்கமாக மாறிவிட்டது. அவர்கள் மத்தியிலே மற்றய அங்கத்தவர்களைவிட அதிக வருடம் சேவை செய்து வந்த மனிதனொருவன் இருந்தான். அவன்தான் அடுத்த தலைவனாக வரவேண்டும் என்று அநேகர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அந்த மனிதனாவன், பல ஆண்டு காலமாக அவனுடைய தற்போதைய பொறுப்புக்களில் திறம்;பட செய்து வந்த போதிலும், தலைவராக இருப் பதற்கு தனக்கு அழைப்பு இல்லை என்று அவன் நன்கு அறிந்திருந் தான், எனினும், தலைவரின் ஆசனத்தை குறித்து மனதில் இருந்த ஆசையினால், இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், இனி இப்படியான சந்தர்ப்பம் கிடையாது என்று தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண் டான். அதனால், நாளடைவிலே பல சமுக சேவைகள் பின்னடைவுகளைக் கண்டது. இதனிமித்தம்;, அந்த ஊரிலே பல குழப்பங்கள் ஏற்பட்டது. பிரி யமானவர்களே, இந்த உலகமானது பதவி உயர்வு அடிப்படையிலே செயற்பட்டு வருகின்றது. ஆனால், நாமோ சர்வவல்லமையுள்ள தேவ னுடைய திருப்பணியை செய்யும்படி அழைக்கப்பட்டிருக்கின்றோம். நாம் பெற்ற அழைப்பிலே நிலைத்திருந்து, பிதாவாகிய தேவனுடைய சித்த த்;தை நம் வாழ்விலே நிறைவேற்றும்படியாக முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, வருடங்களையும், அனுபவங்க ளையும், பதவிகளையும் நோக்கிப் பார்க்காமல், நீர் எனக்குத் தந்த பொறுப்பை நான் உண்மையுள்ள மனதுடன் நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:20