புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 19, 2023)

அடுத்த படிக்கு முன்னேறுவோம்...

ரோமர் 8:29

தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;


நான் அநேக வருடங்களாக துதி ஆராதனைகள், ஜெப கூட்டங்கள், வழிநடத்தி வருகின்றேன். வேதப் படிப்புக்கள், பிரசங்கங்கள் எடுத்து வருகின்றேன். சபையிலே இன்னும் சில உதவி ஊழியங்களை செய்து வருகின்றேன். நாடு கடந்து பல குக்கிராமங்களுக்கு சென்று அநேக ஏழை எளியவர்கள் பலனடையும் வகையில் உதவித் திட்டங்களை செய்து வருகின்றேன். நான் மேலும் வளர்ச்சியடைய என்ன செய்ய வேண் டும் என்று ஒரு மனிதனானவன் தன் மேய்ப்பனானவரிடம் கேட்டுக் கொண் டான். அவனை நன்கு அறிந்து, நேசி த்து வந்த மேய்ப்பனானவர் அவனை நோக்கி: மகனே, நீ செய்து வருகி ன்ற ஊழியங்கள் நல்லது. இன்னும் அதிக ஊக்கமாக ஊழியங்களை முன் னெடுத்து செல்லு. நீ இன்னும் வளர வேண்டும் என்றால், உன் வாழ்க் கையிலே இன்னும் நீ மன்னிக்க முடியாதவர்களை உன் இருதயத்திலே தூக்கி திரிகின்றாயா என்பதை ஆராய்ந்து பார். ஊழியங்களிலும், நற் கிரியைகளிலும் வளர்ச்சியடைவது நல்லது ஆனால் அவைகளைவிட நீ ஆண்டவர் இயேசுவின் சாயலிலே வளர்வதுதான் மிகவும் அவசியமானது. 'கர்த்தர்தாமே நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம் மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.' இவ்வளவாய் அவர் நம்மை மன்னித்து தம்முடைய மகா பெரிதான கிருபை இரக்கங்களை நம்மேல் பொழிந்திருக்க, அதில் கொஞ்சமாவது நாம் மற்றவர் கள்மேல் பொழிய வேண்டாமா என்று ஆலோசனை கூறினார். பிரியமானவர்களே, நீங்களும் பல நற்கிரியைகளை நடப்பித்து வரலாம். ஆனால், உங்கள் உள்ளத்திலே யாரையாவது மன்னி முடியாமல் இருக்கின்றதா? மன்னிப்பை நீங்கள் கொடுத்து, அதை மறந்து போய்விடாதவிடத்து, அது உங்கள் மனதிலே பெருஞ்சுமையாக இருக்கும். கர்த்தர் உங்களுக்கு காண்பித்து இரக்;கத்தில் கொஞ்சத்தையாவது நீங்கள் மற்றவர்களுக்கு காண்பியுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கு என்று என்னை வேறு பிரித்த தேவனே, உம்மை அறிகின்ற அறிவின் வளர்ச்சியானது என் சுபாவங்கள் வழியாக உறுதிப்படும்படிக்கு எனக்கு கற்று தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 3:10