புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 18, 2023)

வளர்ந்த பிள்ளைகள்

2 பேதுரு 3:18

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்


உயர்தர வகுப்பு கல்வியை முடித்து, பல்கலைகழகத்திற்கு படிக்கச் சென்ற வாலிபனானவன், ஒரு நாள் இரவு நள்ளிரவுக்கு பின் வீடு திரும்பினான். அவனுடைய தாயார் அவனை நோக்கி: மகனே, நீ ஏன் இப்படியாக நேரம் தாழ்த்தி வருகின்றாய் என்று தயவாய் கேட்டாள். கோபம் கொண்ட வாலிபனானவன், தாயை நோக்கி: எனக்கும் ஒரு வாழ்க்கை உண்டு, அதை நான் வாழ வேண்டும் என்று கடூரமான தொனியில் பதிலளித்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தகப்பனா னவர் அவனை நோக்கி: நீ யாரோடு பேசுகின்றாய் என்று அறிந்து, உன் வார்த்தைகளையும், தொனியையும் கவனித்துக் கொள் என்று கடிந்து கொண்டார். மனமுடைந்த தாயான வள் தகப்பனானவரை பார்த்து, அவன் முன்பு போல சின்ன பையன் அல்ல, வளர்ந்து விட்டான் எனவே அவனை விட்டுவிடுங்கள் என்று கூறினாள். அவனுடைய உடல் வளர்ந்திருக்கின்றது ஆனால் அவன் வளரவில்லை. மாறாக, அவன் தேவனை அறிகின்ற அறிவிலே முன்பிரு ந்ததைவிட குறைவு பட்டிருக்கின்றான். வளர்ந்தவர்களிடம் வயதிற்கேற்ப முதிர்ச்சியிருக்கும் என தகப்பனானவர் பதிலளித்தார். பிரியமான சகோ தர சகோதரிகளே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவா யாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. இது யாருக்கு கொடுக்கப்பட்டது? வாழ்க்கைபற்றி இன்னும் அறியாத ஐந்து வயது பிள்ளைக்கு கொடுக்கப்பட்டதா? அரசாங்க சட்டப்படி உரி மைகளை பெற்ற பதினெட்டு வயதுடைய வாலிபனானவனுக்கு கொடுக் கப்பட்டதா? அல்லது யாவருக்கும் கொடுக்கப்பட்டதா? ஒரு மனிதனு டைய வளர்ச்சி எதனால் அளவிடப்படுகின்றது? இன்று பலர் வயதிற்கு வந்துவிட்டோம் என்று அகங்காரம் கொள்கின்றார்கள். ஒருவன் வளரும் போது, அவனுடைய நற்பண்புகளும் கூடவே வளர வேண்டும். அப்படி யில்லாத வளர்ச்சியில் பலன் இல்லை. தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய வளர்ச்சி தேவனை அறிகின்ற அறிவினாலே அளவிடப்படும். அந்த வளர்ச்சியானது, ஆவியின் கனிகளினாலே உறுதிப்படுத்தப்படும். எனவே, நீங்கள் எத்தனை வருடமாக கிறிஸ்தவர்கள் என்ற பெயரை தரி த்திருக்கின்றீர்கள் என்பதல்ல, எவ்வளவாய் தேவனை அறிகின்ற அறி விலே வளர்ந்திருக்கின்றீர்கள் என்பதையும் உங்கள் வாழ்க்கையிலே நற்க னிகள் வெளிப்படுகின்றதா என்றும் ஆராய்ந்து பாருங்கள்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, என் உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படட்டும். இயேசு கிறிஸ்துவின் சாயலிலே தினமும் வளர்ந்து, நற்கனிகளிலே பெருகும்படி என்னை வழிடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:16