தியானம் (புரட்டாசி 17, 2023)
உள்ளத்தில் உள்ளவைகளை யார் அறிவார்?
சங்கீதம் 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
'மனிதன் முகத்தைப் பார்க்கின்றான், கர்த்தரோ இருதயத்தை பார்கின்றார்' நீங்கள் நான் எப்படி உடுத்துகின்றேன், எப்படி நடக்கின்றேன், எப்படி தலைமுடியை வெட்டிக் கொள்கின்றேன் என்று என் வெளித்தோற்றத்தைப் பார்க்கின்றீர்கள், ஆனால் கர்த்தர் என் இருதயத்தை அறிவார் என்று வாலிபனானவன் ஒருவன் தன் தகப்பனானவரிடம் கூறிக் கொண்டான். அதற்கு அவனுடைய தகப்பனானவர்: மகனே, நீ சொல் லுவது சரி! கர்த்தர் இருதயத்தை பார்க்கின்றார். நாளுக்கு நாள் உன் தலைமுடியை நீ பலவிதமாக வெட்டி வர்ணம் பூசிக்கொள்கின்றாய். அப்படியாக நீ அலங்கோல ப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உன் முகத்தில் இருந்து வந்ததா அல்லது உன் இருதயத்தில் இருந்து வந்ததா? இடுப்பிலே இருக்க வேண்டிய உன் காற்சட்டை எங்கேயோ இருக்கின்றது. அப்படி போட் டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உன் முகத்திலிருந்து வந்ததா அல்லது உன் உள்ளத்தின் இருந்து வந்ததா? நீ இப்படியாக உடுத்த வேண்டும், இப்படியாக உன் தலையை அலங்கோலப்படுத்த வேண்டும், இப்படியாக நீ என்னோடு பேச வேண்டும் என்னும் தீர்மானங்கள் எங்கே எடுக்கப்படுகின்றது? நீ கூறியது போல கர்த்தர் உன் இருதயத்தை ஆரா ய்ந்து அறிகின்றவர் என்ற படியால் நீ மிகவும் எச்சரிக்கையுள்ளவனாக இரு. ஒருவேளை நீ உன் பேச்சினால் என்னை சமாளித்துக் கொள்ள முடியும் ஆனால் உன் உட்காருதலையும் உன் எழுந்திருக்குதலையும் கர்த்தர் அறிந்திருக்கின்றார். அவர் உன் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகின்றார்;. நீ நடந்தாலும் படுத்திருந்தாலும் உன்னைச் சூழ்ந்திருக்கின்றார். உன் வழிகளெல்லாம் அவருக்குத் தெரியும். உன் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, அதையெல்லாம் கர்த்தர் அறிந்திருக்கின்றார். பிரியமானவர்களே, இந்தத் தியானத்திலே காரியத்தின் கருப்பொருளை நீங்கள் இலகுவாக அறியும்படியாக, வாலிபர்களையே உதாரணமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், நாம் எல்லோருமே நம்முடைய பரம பிதா வுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுகின்றோம். நம்முடைய நடை உடை பாவனையைக் குறித்ததீர் மானங்கள் யாவும், எதேட்சையாய் நடப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன் இருயத்திலே தீர்மானம் செய் தபடி தன் தன் கிரியைகளை நடப்பிக்கின்றான். எனவே, நம் இருத யத்தின் நினைவுகளை அறிந்த தேவன் முன்னிலையில் உண்மையுள்ள வர்களாக நடந்து கொள்ளுங்கள். வேதனை உண்டாக்கும் வழிகளை நியாயப்படுத்தாமல், அவைகளை விட்டு விலகுங்கள்.
ஜெபம்:
என் மனதின் எண்ணங்களை அறிந்த தேவனே, நித்திய ஜீவனை கொடுக்கும் உம்முடைய வார்த்தைகளை என் துர்குணத்திற்கு மூடலாக பயன்படுத்தாமலிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 15:19-20